15 நகரங்கள் குறி.. பாகிஸ்தான் பிளானை காலி செய்த இந்தியாவின் ”சுதர்சன சக்கரா” ஆயுதம் பற்றி தெரியுமா?
டெல்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நேற்று நள்ளிரவில் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. நல்வாய்ப்பாக இந்திய ராணுவம் இந்த முயற்சியினை தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை "சுதர்சன சக்கரா" என்ற ஆயுதத்தை வைத்து தான் அழித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் முயற்சி அப்படியே புஸ்வானமாகியது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே சூளுரைத்து இருந்தார். கடந்த 22 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை 1.05 மணியளவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மீது தாக்குதல்
கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் இந்த துல்லிய தாக்குதலை கணக் கச்சிதமாக செய்து முடித்தது. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை மனதில் வைத்தே, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே இந்த தாக்குதலை இந்திய ராணுவம் செய்து முடித்தது. இந்த நிலையில் இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கூறினார்.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாகவும் அவர் கூறினார். அதாவது பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலை அதிகரித்து வருகிறது என்றும் மீண்டும் தாக்குதல் நடத்த நினைத்தால் நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார். பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறல் நடவடிக்கைகளை செய்து வருகிறது.
நள்ளிரவில் தாக்க முயன்ற பாகிஸ்தான்
இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பிறகு பேசிய அவர், 'என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது' என்றும் தெரிவித்து இருந்தார்.
நிலைமையை மேலும் மோசமாக்குவது இந்தியாவின் நோக்கம் கிடையாது. மோதலை பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால் பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சித்தால் மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவில் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 15 இடங்கள் குறி
இந்தியாவின் 15க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், இதனை இந்தியா தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளது. டிரோன் மூலம் தாக்க முயன்ற பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை "சுதர்சன சக்கரா" என்ற ஆயுதத்தை வைத்து தான் கெத்து காட்டியிருக்கிறது இந்தியா.
சுதர்சன சக்கரா
ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட S 400 வான் பாதுகாப்பு அமைப்பு.. உலகின் அதிநவீன மேம்பட்ட தொழில் நுட்பங்களை கொண்ட ஒன்றாகும். 600 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை கண்டறியும். 400 கிலோமீட்டர் தொலைவில் வைத்து அச்சுறுத்தலை இடைமறித்து தாக்கும் கொண்டது.
இந்தியா இதுவரை நான்கு முறை இந்த ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை பாதுகாக்கும் வகையில் பதான்கோட் விமானப்படை தளம் ஒன்றிலும், ஏனையவை ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் பாதுகாக்கும் வகையிலும் நிறுவப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications