கையில் அணு ஆயுத சூட்கேசோடு.. சீனாவிற்கு போன ரஷ்யா புடின்.. இஸ்ரேல் போரில் திடுக் ட்விஸ்ட்.. பதற்றம்
பெய்ஜிங்: இஸ்ரேல் - பாஸ்தீன போரில் தற்போது ரஷ்யா - சீனா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. இந்த நாடுகளின் நிலைப்பாடு கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் - பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என்று இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நான் சொன்ன கருத்துக்கு பலர் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

அவர்கள் சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றனர். தாங்கள் வைத்ததுதான் சட்டம்.. நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது. இரண்டு தரப்பும் அமைதியை இழந்துள்ளது, என்று கூறியுள்ளார்.
மருத்துவமனை அட்டாக்: இந்த நிலையில்தான் இஸ்ரேல் போரின் போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.
( தூண்டில் மீனாய் சிக்கிய இஸ்ரேல்.. பாலஸ்தீனத்திற்கு துணையாக வந்த 10 வல்லரசுகள்.. முழிக்கும் அமெரிக்கா)
உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கண்டனம்: இந்த தாக்குதலுக்கும் ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று ரஷ்யா தெரிவித்த கண்டனத்தில் இஸ்ரேல் செய்த இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. அமெரிக்கா இதை கடுமையாக கண்டிக்க வேண்டும். அமெரிக்கா இந்த விவகாரத்தில் இரண்டு நிலைப்பாடு எடுத்துள்ளது.

இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றால் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட வேண்டும். சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களை வெளியிட வேண்டும் . நீங்கள் செய்யவில்லை என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய அதிபர் சீனா பயணம்: இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் சீனா சென்றுள்ளார். நேற்று புடின் - ஜி ஜிங்பிங் இடையே ஏற்கனவே கூட்டம் நடந்தது. இவர்கள் இடையே நேற்று 30 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்பிற்கு ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத சூட் கேஸுடன் சென்றுள்ளார். எப்போதும் அவர் இதே சூட் கேஸுடன் அவர் வெளியே செல்வார் என்றாலும்.. இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் அவர் இதே சூட் கேஸுடன் சென்றுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் கையில் சூட் கேஸ் வைத்துள்ள வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications