Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டில் மீனாய் சிக்கிய இஸ்ரேல்.. பாலஸ்தீனத்திற்கு துணையாக வந்த 10 வல்லரசுகள்.. முழிக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேல் பக்கம் சில நாடுகளும், பாலஸ்தீனம் பக்கம் பல நாடுகளும் கைகோர்க்க தொடங்கி உள்ளன.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தற்போது உச்சத்தில் உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதலில் பல்வேறு உலக நாடுகள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளன. போர் நாளுக்கு நாள் கைமீறி சென்று கொண்டு இருக்கிறது.

சூடு போட்டுக்கொண்ட இஸ்ரேல்: இந்த போரில் இஸ்ரேல் சொந்த கையில் சூடு போட்டுக்கொண்டது என்றுதான் கூற வேண்டும் . இஸ்ரேல் சொந்தமாக செய்த காரியம் ஒன்று அந்த நாட்டிற்கே எதிராக திரும்பி உள்ளது.

What are the countries supporting Israel and Palestine in the ongoing epic conflict?

இஸ்ரேல் போரின் போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.

உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

( உலகப்போர் நடக்கும்.. இஸ்ரேல் திட்டம் போட்டு அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டது.. எக்ஸ்பர்ட் எச்சரிக்கை)

இதனால் இஸ்ரேலுக்கு எதிராகவே உலக நாடுகள் திரும்ப தொடங்கி உள்ளன. இஸ்ரேலை ஆதரித்து வந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் கூட இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் ஆதரவு நாடுகள்: இந்த போரில் இஸ்ரேலுக்கு பின் வரும் நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் , இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

What are the countries supporting Israel and Palestine in the ongoing epic conflict?

அடித்து தூக்கும் பாலஸ்தீனம்: இன்னொரு பக்கம் பாலஸ்தீனத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பாலஸ்தீனத்திற்கான மக்கள் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. பாலஸ்தீனத்திற்கு தொடக்கத்தில் ஆதரவு அளிக்காத நாடுகள் கூட இப்போது ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளன,

இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது.. மனித தன்மையற்றது.. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தது மிகப்பெரிய கொடுமை என்று சவுதி தெரிவித்துள்ளது . பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.

What are the countries supporting Israel and Palestine in the ongoing epic conflict?

சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது. சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் லெபனான், சிரியா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகிறது.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடுகள்: பின்வரும் நாடுகள் இந்த போரில் பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகின்றன, லெபனான், சிரியா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, எகிப்து, ரஷ்யா, சீனா, வடகொரியா, அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் பாலஸ்தீனத்தை நேரடியாக ஆதரிக்கின்றன. இந்தியா இந்த போரில் இரண்டு பக்கமும் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+