உலகப்போர் நடக்கும்.. இஸ்ரேல் திட்டம் போட்டு அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டது.. எக்ஸ்பர்ட் எச்சரிக்கை
நியூயார்க்: உலகப்போருக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போர் தொடங்குவதற்கான சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரபல கோடீஸ்வர ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதலானது உலகப்போரை தூண்டிவிடும் வாய்ப்புகள் உள்ளன.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் பல நாடுகளில் பல்வேறு வகையான மோதல்களுக்கு வழிவகுக்கும் அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கும் அப்பால் போரை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.. இதில் போருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக சிறிய உலகபோராக இல்லாமல் இது பெரிய உலகபோராக் மாறலாம். பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது.

உலகப்போர்: போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்வேன். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
( இதுதான் ரியல் அரபு வசந்தம்! எல்லை மீறிய இஸ்ரேல்.. சன்னி - ஷியா பிரிவின்றி இணையும் இஸ்லாமிய நாடுகள்!)
ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும், என்று எச்சரித்து உள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் கடந்த வாரம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். ஈரான் ஆதரவு போராளிகள் உள்ளனர். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இது போக தெற்கு லெபனான் மீது ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் போராக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
என்ன பிளான்?: ஏற்கனவே சிரியா போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால்.. ஈரான் போருக்கு உள்ளே வரும். வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications