இதுதான் ரியல் அரபு வசந்தம்! எல்லை மீறிய இஸ்ரேல்.. சன்னி - ஷியா பிரிவின்றி இணையும் இஸ்லாமிய நாடுகள்!
சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீன தாக்குதல் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய தொடங்கி உள்ளன. உலக அரசியலில் இது உண்மையான அரபு வசந்தம் என்று அழைக்கப்படுகிறது.
அரபு நாடுகளில் இருந்த பல்வேறு ஆட்சிகள், மன்னர் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டதை அரபு வசந்தம் என்று மேற்கு உலகம் அழைக்கும். மேற்கு உலகத்தின் அரசியலுக்கு இது ஆதரவாக இருந்ததால் அதை உலக நாடுகள் அரபு வசந்தம் என்று அழைக்கும். அந்த அரபு வசந்தம் ஒரு வகையில் மத்திய கிழக்கில் பல்வேறு போருக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் ரியல் அரபு வசந்தம் என்று சொல்லும் விதமாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. முக்கியமாக நேற்று இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதல் அந்த நாட்டிற்கே எதிராக திரும்பும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் எதிர்ப்பு: இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.
( நடு இரவில் இஸ்ரேல் செய்த கொடூரம்.. உலக நாடுகளையே குழப்பி எடுத்த மோடி.. ஷாக்கான பிடன்.. என்ன நடந்தது?)
உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒன்று இணையும் அரபு நாடுகள்: இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி - ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி - ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது.. மனித தன்மையற்றது.. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தது மிகப்பெரிய கொடுமை என்று சவுதி தெரிவித்துள்ளது . பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
அரபு வசந்தம்: இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் விவகாரத்தில் இந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்து உள்ளன. பல இஸ்லாமிய நாடுகளை இது ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது. சேர முடியாமல் இருந்த இஸ்லாமிய நாடுகளின் சங்கமமாக இஸ்ரேலின் இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications