நடு இரவில் இஸ்ரேல் செய்த கொடூரம்.. உலக நாடுகளையே குழப்பி எடுத்த மோடி.. ஷாக்கான பிடன்.. என்ன நடந்தது?
டெல்லி: உலக நாடுகளை கிட்டத்தட்ட இந்தியா தனது நிலைப்பாடு மூலம் குழப்பி எடுத்து உள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் மௌனம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நேற்று இரவு செய்த கொடூரம்.. வரலாற்றில் நடந்த போர்களில் நிகழ்ந்த கொடூரங்களிலேயே மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது.. அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது.. அகதிகள் செல்லும் பாதுகாப்பு சாலைகளில் தாக்குதல் நடத்த கூடாது.. சரண்டர் ஆகும் நபர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றெல்லாம் போர் விதிகள் உள்ளன.
எல்லை மீறிய இஸ்ரேல்: இதில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது.. என்பதை தவிர்த்து மற்ற அனைத்து போர் கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே இஸ்ரேல் மீறிவிட்டது. சமீபத்தில் கூட அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதேபோல் அகதிகள் செல்லும் பாதுகாப்பு சாலைகளில் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் குரூரத்திற்கு எல்லை இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேல் மேலும் எல்லை மீறி.. மருத்துவமனை மீதே தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.
உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
( 2வது சத்தம் கேட்கல பார்த்தீங்களா? வசமாக மாட்டிய இஸ்ரேல்.. காசா மருத்துவமனையை தரைமட்டமாகிய ராக்கெட்!)
உலக நாடுகள் கோபம்: இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக உலக நாடுகள் கடும் கோபம் அடைந்து உள்ளன. இஸ்ரேலுக்கு நட்பான நாடுகள் கூட கடும் கோபம் அடைந்து உள்ளன. உதாரணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் இஸ்ரேலுக்கு இந்த போரில் முழு ஆதரவு கொடுத்தார். அவர் இந்த தாக்குதலை கடுமையாக எதிர்த்து உள்ளார்.
கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போரில் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு கொடுத்தார். ஆனால் அவரும் கூட இந்த மருத்துவமனை தாக்குதலை கடுமையாக கண்டித்து உள்ளார். இதெல்லாம் போக இஸ்ரேலின் தோஸ்து அமெரிக்காவும் கூட இந்த போரில் கடுமையான கண்டனங்களை இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தனக்கு கோபத்தை, அதிர்ச்சியை, வருத்தத்தை உண்டாக்கியது என்று அதிபர் பிடன் கூட தெரிவித்துள்ளார்.

மோடி மௌனம்: ஆனால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் இரங்கலோ, பாராட்டோ, எதிர்ப்போ இந்த தாக்குதலுக்கு தெரிவிக்கவில்லை. அவரின் இந்த நிலைப்பாடு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மௌனம் கடுமையான கேள்விகளை.. குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
மோடியின் முதல் நிலைப்பாடு: அதன்படி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் அதை இந்தியா கண்டனம் செய்தது. அதன்படி இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு முழு ஆதரவை இந்தியா கொடுக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடியின் இரண்டாம் நிலைப்பாடு: ஆனால் அதன்பின் இஸ்ரேல் காஸாவில் நடத்திய கடுமையான தாக்குதலை பார்த்து இந்தியா புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது தொடர்பாக, பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் தாக்குதலில் தற்போது மோடி மௌனம் காத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications