2வது சத்தம் கேட்கல பார்த்தீங்களா? வசமாக மாட்டிய இஸ்ரேல்.. காசா மருத்துவமனையை தரைமட்டமாகிய ராக்கெட்!
ஜெருசலேம்: காஸாவில் இருக்கும் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இரண்டாவது வெடிப்பு சத்தம் கேட்கவில்லை என்பதால் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் போர் விதிப்படி, ஐநா விதிப்படி மிக மிக தவறானது ஆகும். அதாவது போர் விதிப்படி மருத்துவமனை, பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவே கூடாது.
ஆனால் அதையும் மீறி இங்கே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு இஸ்ரேல் கொடுக்கும் விளக்கம் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை.. பாலஸ்தீன ஆயுத அமைப்பான பிஜேஐ நடத்திய தாக்குதலில் ராக்கெட் திசைமாறி மருத்துவமனை மீது சென்று விழுந்துவிட்டது என்பது ஆகும். ஆனால் அந்த அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இஸ்ரேல்தான் நடத்தியது: அதே சமயம் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக உலக நாடுகள் உறுதியாக தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல்தான் இங்கே உள்ள ஹமாஸ் படை அமைப்புகளை தாக்குவதற்காக ராக்கெட்டை ஏவி உள்ளது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.
உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹமாஸ் படைகள்: ஹமாஸ் படைகள் உள்ளே சுரங்கம் அமைத்து உள்ளது. மருத்துவமனைக்கு கீழே வாழ்ந்து வருகிறது. இதை காலி செய்யவே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. அதோடு உள்ளே ஆயுத கிடங்கு உள்ளது. இந்த ஆயுத கிடங்கை அழிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
( வேலையை பார்த்த நெதன்யாகு! அமெரிக்காவை போருக்குள் இழுக்க முடிவு! உலகப்போராக மாற்றாம விடமாட்டார் போலயே )
பரபரப்பு; காஸாவில் இருக்கும் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இரண்டாவது வெடிப்பு சத்தம் கேட்கவில்லை என்பதால் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
உள்ளே ஆயுத கிடங்கு இருந்தால் இரண்டாவது சத்தம் கேட்டு இருக்க வேண்டும். இங்கே இரண்டாம் வெடிப்பு எதுவும் இல்லை, அதனால் அது ஆயுத தளம் அல்ல என்பது உறுதியாகிறது. இது இஸ்ரேல் தாக்குதல் ராக்கெட் வெடிப்பு போலவே உள்ளது. ஹமாஸிடம் இவ்வளவு பெரிய ராக்கெட் இல்லை. 1,000lb அளவு கொண்ட ராக்கெட் ஆகும் இது. ஹமாஸ் படையிடம் இவ்வளவு பெரிய ராக்கெட் இல்லை. அப்படி என்றால் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட வெடிப்பு இல்லாத காரணத்தால் இது மருத்துவமனைதான் ஆயுத கிடங்கு இல்லை என்பது ஊர்ஜீதம் ஆகிறது. அதனால் இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications