வேலையை பார்த்த நெதன்யாகு! அமெரிக்காவை போருக்குள் இழுக்க முடிவு! உலகப்போராக மாற்றாம விடமாட்டார் போலயே
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் கடந்த வாரம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.
சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். ஈரான் ஆதரவு போராளிகள் உள்ளனர். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹெஸ்புல்லா இயக்கம் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது
( மோடி போட்ட போடு..மீனாய் துடிக்கும் இஸ்ரேல் நெதன்யாகு.. எதிர்பார்க்கவே இல்லையே.. உலக அரசியலே மிரளுது )
லெபனான் தாக்குதல்: லெபனானில் ஆயுதப்படை குழுவாகவும், அரசியல் கட்சியாகவும் இந்த ஹெஸ்புல்லா இயங்கி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான இது , அந்நாட்டு அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் ஈரான் போன்ற மற்ற ஷியா நாடுகளுக்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்த அமைப்புதான் சிரியாவில் அரசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. அதேபோல் ஈரான் உடன் இணைந்து லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க போராடி வருகிறது.
சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

தெற்கு லெபனான் மீது ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் போராக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
என்ன பிளான்?: ஏற்கனவே சிரியா போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால்.. ஈரான் போருக்கு உள்ளே வரும். வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications