கர்நாடக காட்டுக்குள் கேஷூவலாக நின்ற வெள்ளை உருவம்.. ஆடிப்போன டீம்.. குகைக்குள்ளே ரஷ்ய பெண் எப்படி?
சென்னை: கர்நாடகாவில் குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய பெண், தன்னிடம் எதுவும் சொல்லாமல் கோவாவில் இருந்து சென்று விட்டார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.. அத்துடன் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.. ஆனால், இதற்கு ரஷ்ய பெண் ஒப்புக் கொள்வாரா? யாரிந்த பெண்? இங்கு எப்படி? எப்போது வந்தார்? கர்நாடக அரசு மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் என்னென்ன? இதுகுறித்து பிரபல வழக்கறிஞர் சார்லஸ் வெற்றிவேந்தன், பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சார்லஸ் வெற்றிவெந்தன், "கர்நாடகா கொக்கர்னா பகுதியிலுள்ள பயங்கர காட்டுப்பகுதியாகும்.. காட்டுப்பகுதியை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு ஒரு டீம், அந்த காட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்தது..

வெள்ளை நிற உருவம்
அப்போதுதான், வெள்ளையாக ஒரு பெண் அங்கு நடமாடுவதை பார்த்து பயந்துவிட்டார்கள்.. ஒருவேளை அது பேயாக இருக்குமோ என்று அச்சப்பட்டுள்ளனர்.. பிறகு திடீரென குழந்தை சத்தம் கேட்டிருக்கிறது.. 4 மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள், அந்த பெண்ணுக்கு இருப்பதும் தெரியவந்தது..
கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டருக்கான அடர்ந்த காட்டில், கூடாரம் போல அமைத்து, இந்த பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.. 2017ம் ஆண்டிலிருந்து இந்த பெண் இதே காட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், அங்குள்ள வனத்துறை, காவல்துறை இதை ஏன் கண்டுபிடிக்கவில்லை என தெரியவில்லை.. இந்த கொக்கர்னா காட்டுப்பகுதியில் வன விலங்குகள் அதிகம்.. அதிலும் விஷப்பாம்புகள் நிறைந்த காட்டுப்பகுதியாகும்..
வனத்துறை அதிகாரிகள் விசாரணை
இதனால் காட்டுக்குள் சென்ற டீம், அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். எனினும், அந்த வெள்ளை உருவம் யார் என்ற சந்தேகம் மட்டும் வலுத்துள்ளது.. எனவே, கும்தா தாலுக்கின் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்திருக்கிறார்கள்..
இதற்கு பிறகுதான், வனத்துறை அதிகாரிகள், காவல்துறையுடன் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.. பிறகுதான், அந்த பெண்ணை நேரில் பார்த்துள்ளார்கள்.. 40 வயது பெண்மணி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, "ஆன்மீகத்தின் மீது எனக்கு நாட்டம் உள்ளதால், நிம்மதியான, பாதுகாப்பான இடத்தை தேடி வந்தேன்.. அந்த வாழ்க்கை எனக்கு இந்த காட்டில் கிடைக்கவும், அப்படியே தங்கிவிட்டேன்.. இலை தழைகள், பழங்களை சாப்பிட்டு வளர்ந்தேன்" என்று அந்த ரஷ்ய பெண் சொல்கிறார்..
இதனிடையே இஸ்ரேலில் உள்ள அப்பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியை காணவில்லை என்றும், குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதால், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் ஏற்கனவே போலீசில் புகார் தந்திருக்கிறாராம்.
எப்படி சாத்தியம்? யாரிந்த பெண்?
2017ல் காட்டுக்குள் வந்திருக்கிறார்.. ஆனால், இத்தனை கிலோ மீட்டர் 2 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நடந்தே போனாரா? என்பது வியப்பாக உள்ளது.. அதேபோல, கொக்கானா காட்டுப்பகுதியில் இந்த வழியில் சென்றால், குகை இருக்கும் என்றெல்லாம் அந்த பெண்ணுக்கு எப்படி தெரிந்திருக்கும்? ஏற்கனவே இங்கு அவர் சென்றிருக்கிறாரா?
8 வருடமாக பேச்சுத்துணையே இல்லாமல், தனித்து எப்படி இந்த பெண் வாழ்ந்திருப்பார்? என்றெல்லாம் தெரியவில்லை.. மனரீதியாக பிரச்சனை ஏற்பட்டு, அதன்பிறகு இப்படி வந்திருக்கலாம்.. இதற்கு ஆன்மீக காரணம் சொல்ல முடியாது. ஆன்மீகத்தை நகர்ப்பகுதியிலும் தேர்ந்தெடுக்கலாம்..
சட்டவிரோதமாக காட்டுக்குள் தங்கியிருப்பது குற்றம்தான்.. இனி இவரை கைது செய்து சிறையில் வைத்து, குழந்தைகளையும் அவரிடமிருந்து பிரித்துதான் ஆகவேஒணடும்.. எனவேதான், இதற்கு பதிலாக, அந்த பெண்ணை ரஷ்ய நாட்டிற்கே திருரப்பி அனுப்பிவிடலாம் என்ற முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது.. எனினும் கர்நாடக மாநிலம் மட்டுமே இதுதொடர்பான முடிவை எடுத்துவிட முடியாது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, அவர்களது ஆலோசனையை பெற்றபிறகுதான், அடுத்தக்கட்ட நடவடிக்கைகக்குள் கர்நாடக அரசு செல்ல முடியும்..
முழுமையான விசாரணை
அதேசமயம் எளிதாகவும் இந்த விஷயத்தை கடந்து செல்ல முடியாது.. பஹல்காம் பிரச்சனை போன்ற எத்தனையோ விஷயங்களை எதிர்கொண்டு வருகிறோம்.. பஹல்காம் விவகாரத்தில் மிகப்பெரிய போர், கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.. எனவே, தற்போது சம்பந்தப்பட்டவர் ரஷ்யாவை சேர்ந்த பெண் என்கிறார்கள்..
இஸ்ரேல் மொசாடு கதை, பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் சம்பவங்களை அனைவருமே அறிவர்.. எனவே கர்நாட காட்டில் இந்த பெண் தங்கியிருந்ததுடன், அந்த காட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. எனினும், அப்பெண்ணின் மீதுள்ள பரிதாபம், கரிசனம் காரணமாக, ரஷ்யாவிற்கே அவரை திருப்பி அனுப்பி வைக்கும் வேலைகளை கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
காட்டில் விஷப்பாம்பு
மேற்கண்ட ரஷ்ய பெண்ணின் பெயர் நினா குட்டினா.. இவருக்கு உறவினர்களிடமிருந்து பணம் வருமாம்.. இதனால், வாரம் ஒருமுறை காட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து, காய்கறிகள், பழம், பால், போன்றவற்றை வாங்கி செல்வாராம்.. குகைக்குள்ளேயே தங்கி, குழந்தைகளுக்கு தியானம், பாட்டு , யோகாவை கற்றுத்தந்துள்ளார்.. போலீசார் சொல்லும்வரை அந்த காட்டில் விஷப்பாம்பு இருப்பதே, நினாவுக்கு தெரியாதாம். தற்சமயம் பாதுகாப்பாக அப்பெண் தங்கவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications