2021 ல் கூட்டணிக்காக கட்சிகள் அணுகின.. ஆனால் இப்ப விஜய் மக்கள் இயக்கம் இப்படி ஆகிடுச்சே.. எஸ் ஏ சி
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்துவிட்டது. காசு கொடுத்தால் அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் பதவி கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டதாக இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னணி நடிகர் விஜய்யை ஏற்றி விட்ட ஏணி அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர். இவர் விஜய்யை அரசியல்வாதி ஆக்கி பார்க்க ஆசைப்படுகிறார்.
ஆனால் விஜய் இப்போது அவசரப்பட வேண்டாம். நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என கருதுகிறார். இந்த நிலையில் விஜய்க்கு தெரியாமலேயே அவருடைய சம்மதம் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார். இதை அறிந்த விஜய் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

பிரச்சினை
இந்த பிரச்சினையால் விஜய் தனது அப்பாவுடன் பேசுவதே இல்லை என கூறப்படுகிறது. ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் தனது பேட்டிகளில் கூட விஜய் என்னுடன் பேசுவதில்லை, வீட்டிற்கு வந்தும் சந்திப்பதே இல்லை, மாதம் ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து எங்களை பார்த்துவிட்டு போ விஜய் என்று கேட்டிருந்தார்.

81 ஆவது பிறந்தநாள்
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு சந்திரசேகரின் 81 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவும் மட்டுமே கொண்டாடினர். அந்த விழாவில் விஜய் கலந்து கொள்ளவே இல்லை. இதையடுத்து சந்திரசேகர் தனக்கு 80 வயது முடிவடைந்த நிலையில் சஷ்டியாப்த பூர்த்தி நடத்த திருக்கடையூர் சென்று யாகங்கள் செய்தார்.

விஜய்
அப்போது விஜய்க்காகவும் வேண்டிக் கொண்டதாக தெரிகிறது. 60 ஆவது திருமணம், 80 ஆவது திருமணத்தை மகன், மகள், மருமகள், மருமகன், பேர குழந்தைகள், உறவினர்கள் சூழ நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எஸ் ஏ சிக்கு அது போல் நடக்கவில்லை. இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

விஜய் மக்கள் இயக்கம்
அப்போது விஜய் மக்கள் இயக்கம் குறித்தும் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பலரும் என்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தனர். என்னை அவர்களின் அப்பாவாக நினைக்கிறார்கள். விஜய் என்னும் மந்திரத்தை தவிர ஒன்றும் அறியாதவர்கள்.

விஜய்யிடம் பேச்சு
அந்த ஒரு பாசத்திற்காக என்னை சந்திக்க வந்தனர். விஜய் மக்கள் இயக்கம் நீர்த்து போய்விட்டது, வலுவிழந்துவிட்டது. விஜய் மக்கள் இயக்கத்தில் நீக்கப்பட்ட பலரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க நான் பாடுபட்டு வருகிறேன். இதுகுறித்து விஜய்யிடம் பேசிய போது நேரம் வரும் போது பார்க்கலாம் என்று சொன்னார்.

காசு கொடுத்தால் மாவட்டத் தலைவர்
அரசியல் கட்சிக்கு உண்டான அனைத்து தகுதியும் வாய்ந்த ஒரு அமைப்பாக விஜய் மக்கள் இயக்கம் இருந்தது. தேர்தல் நேரங்களில் பல கட்சிகள் தங்களை அணுகினர். இப்படி இருந்த இயக்கத்தை காசு கொடுத்தால் மாவட்டத் தலைவர் பதவி கிடைக்கும் நிலைக்கு சிலர் கொண்டு வந்துவிட்டதாக சந்திரசேகர் கூறினார்.












Click it and Unblock the Notifications