சோ குடும்பத்திடம் இருந்து துக்ளக்கை அபகரித்தது ஏன்?.. குருமூர்த்திக்கு சு.சாமி பரபர கேள்வி
சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை கைப்பற்றியது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்தது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை.
முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம், கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று ரஜினி குறிப்பிட்டார். நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

என்ன கேள்வி
இந்த நிலையில் துக்ளக் யாருக்கு சொந்தமானது என்பதும் குறித்த கேள்விகள் தற்போது எழ தொடங்கி உள்ளது. இது தொடர்பாக திமுகவினர் நிறைய புகார்களை அடுக்கி வருகிறார்கள். துக்ளக்கை நிறுவியது சோ. அவரின் மறைவிற்கு பின், சோ வாங்கிய கடனுக்காக குருமூர்த்தி துக்ளக்கை பறிமுதல் செய்து கொண்டார். சோ மனைவியை கட்டாயப்படுத்தி, இப்படி செய்துவிட்டார், என்று திமுகவினர் பலர் இணையத்தில் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

குற்றச்சாட்டு
தற்போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இதேபோல் குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். அதன்படி சோ மனைவியிடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை மிரட்டி வாங்கி இருக்கிறார். இதற்கு பின் என்ன நடந்தது என்று குருமூர்த்தி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் ஏன் சோ மனைவியிடம் இருந்து துக்ளக்கை பறித்தார் என்பதை விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

ஆசிரியர் யார்
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். பலர் கடந்த ஒரு வருடமாக வைக்கும் புகார் போல நான் துக்ளக்கை யாரிடம் இருந்தும் அபகரிக்கவில்லை. 1988ஆம் ஆண்டு ஆனந்த விகடன் குழுமத்திடம் இருந்து, ராம்நாத் கோயங்கா என்பவரின் கோரிக்கையின் பெயரில் துக்ளக்கை வாங்கினேன். ஆனால் அதில் எனக்கு பங்கு இல்லை. என் மனைவிக்கு மட்டுமே பங்கு இருந்தது.

சோ எப்படி
அதேபோல் சோவிற்கும் துக்ளக்கில் பங்கு இருந்தது. அதன்பின் சோதான் துக்ளக்கை நடத்தி வந்தார். என் மனைவி பணிகளை கவனித்தார். நான் நேரடியாக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவேன். சோ உடன் இணைந்து நிறைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். முக்கியமான கட்டுரைகளை எழுதி இருக்கிறோம்.

யார் வாரிசு
2007ஆம் ஆண்டு துக்ளக்கில் என்னை வாரிசாக வேண்டும் என்று சோ கோரிக்கை வைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 2013 வரை அவர் இந்த கோரிக்கையை வைத்தார். ஆனால் நான் ஏற்கவே இல்லை. அவர் இறக்கும் முன் கூட, 2008ல் துக்ளக் இதழின் 50% பங்குகளை மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கு துக்ளக் மீது விருப்பம் இல்லை என்பதை உணர்த்த இப்படி செய்தேன். ஆனால் சோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

சோவின் மறைவு
அதன்பின் சோவின் மறைவுக்கு பின் துக்ளக்கின் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டும் என ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் என்னிடம் வலியுறுத்தினார்கள். சோ மறைந்த அடுத்த நாள் துக்ளக்கின் மொத்தக்குழுவும் தன்னை சந்தித்து பொறுப்பேற்க வலியுறுத்தியது . அப்போது தமிழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கண்டு கொண்டிருந்தது. இதனால் துக்ளக்கின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்

என்ன கட்டுரை எழுதுகிறார்
ஆனால் இப்போது வரை துக்ளக்கில் கட்டுரை எழுத்துவதற்காக, அதில் பணி செய்வதற்காக நான் சம்பளம் வாங்கவில்லை. என் நாளில் 50% நேரத்தை நான் துக்ளக்கிற்காக ஒதுகிறேன். ஆனால் நான் அதை அபகரிக்கவில்லை. அதை அபகரிக்கும் எண்ணம் எனக்கு இருந்திருந்தால், 1991தில் இருந்து வெளியேறி இருக்க மாட்டேன், 2008ல் என் பங்குகளை விற்று இருக்க மாட்டேன், என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications