சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றது.. புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    S.Gurumurthy: 'இது வெற்றியான தோல்வி'- புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்- வீடியோ

    சென்னை: அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றுவிட்டதால் ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இந்த நிலையில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக) 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

    ஆனால் தேசிய அளவில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாஜகவும், 7 தொகுதிகளில் பாமகவும், 4 தொகுதிகளில் தேமுதிகவும் தலா ஒரு தொகுதியில் புதிய தமிழகம், புதிய நீதி கட்சியும் படுதோல்வி அடைந்துள்ளது.

    கட்சிகள்

    கட்சிகள்

    இதற்கு காரணமாக தமிழர் நலனில் அக்கறையில்லாத பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக உள்பட இத்தனை கட்சிகளும் தோற்றதாக கூறப்படுகிறது. தேர்தலில் தோற்றாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இந்த கட்சிகள் துடித்துக் கொண்டிருந்தன.

    மத்திய அமைச்சரவை

    மத்திய அமைச்சரவை

    ஆனால் பாஜகவோ அதிமுக கூட்டணியை கைவிட்டது. தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களிலும் வெல்லாததாலும் அதிமுகவில் கோஷ்டி பூசலை டெல்லியிலும் காண்பித்ததாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    சலசலப்பு

    சலசலப்பு

    இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பாஜக தோல்விக்கு அதிமுகதான் காரணம் என சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

    தோல்வி

    தோல்வி

    அவர் கூறுகையில் அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் 5 தொகுதிகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் 5 தொகுதிகளில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றுள்ளது.

    வாக்கு வித்தியாசம்

    பாஜகவை எடுத்துக் கொண்டோமேயானால் 2 தொகுதிகளில் 2 லட்சத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரே ஒரு தொகுதியில் 3 லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் இன்னொரு தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றுள்ளது.

    எதிர்ப்பு அலை

    எதிர்ப்பு அலை

    ஒரு வேளை மோடி எதிர்ப்பு அலை வீசியிருந்தால் எல்லா தொகுதிகளிலும் பாஜக 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றியிருக்க வேண்டும். அப்படியெனில் இது யாருக்கு எதிரான எதிர்ப்பு அலை? என கேட்டுள்ளார்.

    உண்மையில்லை

    அது போல் மற்றொரு டுவீட்டையும் அவர் போஸ்ட் செய்துள்ளார். அதில் இந்த எதிர்ப்பு அலை டுவீட்டை டேக் செய்து இதை நான் பதவி செய்ததற்கு காரணமே மிகவும் பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் மோடிக்கு எதிரான அலை வீசியதால்தான் தோல்வி என பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

    English summary
    S.Gurumurthy tweet that Why BJP in Tamilnadu lose in all the 5 constituencies? He accuses ADMK is the main reason for this lose.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X