Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கொடி கம்பம் பஞ்சாயத்து.. எஸ்.ஆர்.சேகர் வைத்த முக்கிய பாயிண்ட்..ஆஹா, இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லியே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே வைக்கப்பட்ட கட்சி கொடி கம்பம் காவல்துறையால் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், கொடி கம்பம் அமைக்க காவல்துறை அல்லது மாநகராட்சியின் அனுமதி அவசியமில்லை என பாஜக மாநில பொருளார் எஸ்.ஆர். சேகர் கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அருகே, சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

S.R. sekhar has said that police permission is not required to plant a flag pole

மறுபுறம் பாஜகவினரும் இவர்களை கலைத்து அனுப்ப முயன்றனர். இது ஒரு கட்டத்தில் பெரும் சலசலப்பாக எழுந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கும் புகார் சென்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் கொடி கம்பம் வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறி கம்பத்தை அகற்ற முயன்றனர். இதற்காக ஜேசிபி கொண்டுவரப்பட்டது. உடனே ஆவேசமடைந்த பாஜவினர் ஜேசிபியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதேபோல காவல்துறையனருடன் தள்ளுமுள்ளு செய்தனர். பொறுத்து பார்த்த போலீஸ் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றியது.

இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது, குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

100 கொடிக்கம்பங்கள் நடப்படும்: அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.

S.R. sekhar has said that police permission is not required to plant a flag pole

இந்நிலையில் பாஜக தொண்டர்கள் மீது திமுக அரசு திட்டமிட்டு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதாகவும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை தமிழகம் அனுப்புகிறது பாஜக தேசிய தலைமை. இப்படி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், "கொடி கம்பவம் அமைக்க காவல்துறை அல்லது மாநகராட்சி அனுமதி பெற வேண்டும் என சொல்லப்படுவதில் உண்மை இல்லை" என கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, "கொடிக்கம்பம் அமைக்க காவல்துறையோ அல்லது மாநகராட்சியோ அனுமதி எதுவும் தருவதில்லை. இதை நகராட்சி நிர்வாக த்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலாக கொடுத்துள்ளது. எனவே அனுமதியின்றி நடப்பட்டதற்காக கம்பம் அகற்றப்பட்டது என்று கூறுவது தவறு" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+