நோ.. நோ பேட் வேர்ட்ஸ்.. ஆதவ் அர்ஜுனாவை பொளந்து கட்டிய எஸ்.வி.சேகர்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக அரசை கண்டித்து தவெக நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவை கடுமையாக விமர்சித்தார். பொதுவெளியில் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்று இந்த தற்குறி முட்டாள்களுக்கு தெரிவதில்லை. அதில் முதல் இடத்தில் இருப்பது ஆதவ் அர்ஜுனா என்று எஸ்.வி. சேகர் சாடியுள்ளார்.
திமுக ஆதரவாளரான எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எல்லோருக்கும் வணக்கம். தினமும் ஏதாவது வீடியோ வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. ஏதாவது முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் சில சமயம் அரசியல் என்னை பேச வைக்கிறது.

ஆதவ் முட்டாள் திருடன்
தமிழ்நாடு முழுவதும் தவெக சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என போராட்டம் நடத்தியுள்ளனர். தலையில்லாத முண்டம் போல இந்தப் போராட்டத்தில் அந்த தலைவரே வரவில்லை. தலைவருக்கு தெரியப்படுத்தினார்களா, வரக்கூடிய நிதானத்தில் இருந்தாரா, வந்தால் பேசக் கூடிய நிதானத்தில் இருந்தாரா, இப்படி ஒரு விஷயம் நடப்பது அவருக்கு தெரியுமா, தெரியாத தெளிவான மனோபாவத்தில் இருந்தாரா என எதுவும் தெரியாது.
தலையில்லாத முண்டங்கள் மட்டும் தான் எல்லா இடங்களிலும் கத்தியிருக்கிறது. அதில் அதிகம் கத்திய 2 மிகப்பெரிய தற்குறிகள் பற்றி தான் பேசப்போகிறேன். லாட்டரி டிக்கெட் விற்று பல லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி தற்கொலைக்கு தள்ளிய ஆதவ் அர்ஜுனா ஒரு முட்டாள் திருடன். தூத்துக்குடியில் எங்கோ கழிப்பறை இல்லை என கத்தியுள்ளார்.
பொறுக்கி.. திருடன்
இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்கிறது என்று மோடி சொல்லியுள்ளார். துணிச்சல் இருந்தால் மோடியை திட்டட்டும். முட்டாள் முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு பொறுக்கித்தனமான வார்த்தை வருகிறது. பொறுக்கியாக, திருடனான பல லட்சம் குடும்பங்களை கெடுத்தவர்கள் வாயில் இருந்துதான் இப்படிப்பட்ட வார்த்தை வரும்.
பொதுவெளியில் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்று இந்த தற்குறி முட்டாள்களுக்கு தெரிவதில்லை. அதில் முதல் இடத்தில் இருப்பது ஆதவ் அர்ஜுனா. ஏற்கனவே திருமாவளவனை கவிழ்க்க பார்த்தார். அவர் அரசியல் தெரிந்த புத்திசாலி. அதனால் ஆதவை போடா வெளியே என விரட்டியுள்ளார். இவன் ரொம்ப அசிங்கமாக உள்ளது. (S.V.Sekhar)
நாயை போல விரட்ட வேண்டும்
நம்மை கடிக்க வரும் நாயிடம் பொறுமையாக பேசுவதை விட, குச்சி எடுத்து பொளேர் என அடித்தால் தான் புத்தி வரும். அப்போதுதான் அது கடிக்காமல் ஓடும். அப்படியானவர் தான் ஆதவ் அர்ஜுனா. காலில் பட்ட சாணியை கழுவி செல்வது போல உங்களை கண்டு கொள்ளாமல் செல்பவர் தான் முதலமைச்சர். இவரிடம் உதயநிதி நேருக்கு நேர் பேச வேண்டுமாம்.
அவரிடம் பேசி உதய் ஜெயித்துவிட்டால் ஆதவ் அரசியலில் இருந்தே போய்விடுவாராம். அவர்கள் இன்னும் அரயிலுக்குள்ளேயே வரவில்லை. பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்பவர்கள் எல்லாம் அரசியலை பற்றி பேசலாமா. கரூரில் வந்த மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் 43 பேரை கொன்றவர்கள் கழிப்பறை பற்றி பேசலாமா,
கரூர் சம்பவம்
43 பேர் இறந்துவுடன் ஓடிப்போன கோழைகள். ரஜினியை திமுக மிரட்டியதால் அரசியலில் இருந்து விலகி சன் பிக்சருக்கும், ரெட் ஜெயின்டுக்கும் படம் நடிக்க சென்றதாக கூறுகின்றனர். உதயநிதியின் கால் தூசிக்கு கூட வராதவர்கள் இதைப் பற்றி பேசலாமா. மே மாதத்திற்கு பிறகு கட்சியை கலைத்துவிடுவார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்புக்காக ஒரு அரசியல் கட்சியில் உள்ளனர்.
உதயநிதியை பற்றி என்ன யோகியதை இருக்கிறது. உங்கள் தலைவர் இன்னும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வந்தாலும் ஜோடியாக தான் வருகிறார். முட்டாள் தனத்தின் உச்சத்தில் உள்ளது. ஐஆர்எஸ்சாக இருந்த ஒன்றும் செய்ய முடியாததால் அரசியலில் அதிகம் சம்பாதிப்பதற்கு அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளார்" என்றார்.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications