எம்எல்ஏ கூட ஆக முடியல.. இன்னும் 2 மாசம்தான்.. அண்ணாமலை சிறை செல்வார்.. எஸ்.வி.சேகர் விமர்சனம்
சென்னை: காவல் நிலையத்தில் திருடர்களுடன் பழகிய அண்ணாமலைக்கு 100 ஓட்டு கூட கிடைக்காது என நடிகர் எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்து வருகிறார். தற்போது அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். ஆனால் அவரை அவரது சொந்த கட்சியினரே விமர்சிக்கும் நிலை எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர் தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார். ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலைக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி பேசி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு இரு பக்கமும் "அடி" என்பதை போல் அதிமுக, திமுக, சொந்த கட்சியினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.
முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். மேலும் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புதுவையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அவருக்கு சமூகவலைதளங்களிலும் விமர்சனங்கள் குவிகின்றன.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக அதிரடியாக பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் காவல் நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை. அவர் மோடி, அமித்ஷாவை விட தான்தான் பெரியவர் என கருதுகிறார். தன்னை விட பெரியவர் யாரும் இல்லை என்றும் எண்ணுகிறார்.
பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். பாஜக மாநில தலைவராக இருந்து எம்எல்ஏவாக கூட ஜெயிக்க முடியவில்லை. இதில் அவர் பின்னால் 25 எம்பிக்கள் இருப்பார்கள் என நினைக்கிறார். அவரால் 25 எம்பிக்கள் முன் நின்று போட்டோ மட்டுமே எடுக்க முடியும். அண்ணாமலை முயற்சியால் 100 ஓட்டுகள் கூட பாஜகவுக்கு கிடைக்காது.
2 மாதத்தில் அண்ணாமலை எங்கே போவார் என தெரியவரும். அவர் சிறைக்கு செல்வாரா இல்லை கட்சியை விட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே பல பேட்டிகளில் அண்ணாமலை விரைவில் பதவிநீக்கம் செய்யப்படுவார் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலைக்கு பதில் வானதி சீனிவாசன், கல்யாண ராமன், ஆர்எஸ்எஸ் நல்லகண்ணு, நயினார் நாகேந்திரன் ஆகிய 4 பேரில் யாராவது ஒருவர் தமிழக பாஜக தலைவராக வருவார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் அவர் வேறு கட்சியை தொடங்கும் அளவுக்கு பணம் இருப்பதாகவே எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications