ரபேல் வாட்ச் சர்ச்சை! நான் கட்டியிருக்கும் வாட்சுடன் சும்மா ஒரு போட்டோ! எஸ்.வி.சேகர் பரபரப்பு ட்வீட்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் லட்சக்கணக்கில் மதிப்புடையது என கூறப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகியான எஸ்.வி.சேகர் தான் அணிந்திருக்கும் வாட்ச் குறித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் பல்வேறு விதத்தில் சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. திருச்சி சூர்யா சிவா- டெய்சி ஆடியோ, காயத்ரி ரகுராம் இடைநீக்கம், சூர்யா சிவாவும் டெய்சியும் அக்கா- தம்பி என்ற பேட்டி, திருச்சி சூர்யா சிவா இடைநீக்கம், கேசவ விநாயகம் மீது புகார் கூறி திருச்சி சூர்யா சிவா பாஜகவிலிருந்து விலகல் என அடுத்தடுத்து பரபரப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பல தகவல்களால் பரபரப்பு எழுந்தது. இதனால் திமுக வெர்சஸ் பாஜகவிடையே வார்த்தை போர் ஏற்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலையின் அனுமதியின்றி வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோவை கார் வெடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது என தொடர்ந்து அந்த கட்சியில் புயல் வீசி வருகிறது.

ரிஸ்ட் வாட்ச்
அந்த வகையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அண்ணாமலை கையில் கட்டியுள்ள Wrist watch சுவிட்சர்லாந்து நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதன் விலை ரூ 3.5 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

கோவையில் பேட்டி
இந்த நிலையில் கோவையில் அன்னூர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது ரபேல் விமானங்களின் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வாட்ச். இந்த வாட்ச் உலகில் 500 பேரிடம் மட்டுமே உள்ளது. நான் கட்டியிருக்கும் இந்த வாட்ச் 149 ஆவது வாட்ச் ஆகும்.

தேசியவாதி
நான் தேசியவாதி என்பதால் வெளிநாட்டு வாட்ச்களை கட்டவில்லை. என் உயிர் உடலில் இருக்கும் வரை இந்த வாட்சை கட்டியிருப்பேன் என தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு மணி நேரத்தில் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டால் ஏழைகளும் அந்த வாட்ச்சை வாங்குவார்கள் என சவால் விடுத்திருந்தார்.

234 தொகுதிகள்
இதற்கு பதிலளித்த அண்ணாமலை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அந்த பயணத்தின் முதல் நாள் அன்று எனது சொத்து கணக்குகளை வெளியிடுவேன். நான் ஐபிஎஸ் ஆனது முதல் இன்று வரை என்னென்ன கணக்குகள் உள்ளதோ அவற்றை வெளியிடுவேன். வாட்ச் வாங்கியதற்கான ரசீது என்னிடம் உள்ளது என்றார்.

விடாத செந்தில் பாலாஜி
இந்த கருத்திற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி விடாமல், சொத்து கணக்கு சாம்பார் கணக்கெல்லாம் யாரு கேட்டது, வாட்ச்க்கான பில் மட்டுமே கேட்டோம் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்க அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச்தான் பிரச்சினையா என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

வாட்ச் விவகாரம்
இப்படி அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் அன்றாடம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மட்டுமல்லாது , பாஜகவிலேயே அண்ணாமலை வாட்ச் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவின் மூத்த நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கட்டியிருக்கும் கை கடிகாரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, "சும்மா டைட்டன் எட்ஜ் கைக் கடிகாரத்துடன் ஒரு போட்டோ" என பதிவிட்டுள்ளார். டைட்டன் எட்ஜ் வாட்ச்கள் தோராயமாக ரூ 2000 முதல் ரூ 15 ஆயிரம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு










Click it and Unblock the Notifications