என் புள்ளைய அந்த மர்ம வலையில இருந்து காப்பாத்துங்க: உருகிய எஸ்ஏசி.. விஜய் பற்றி உடைத்த உண்மை இதுதான்
சென்னை: சங்கீதாவின் விவாகரத்து மனு ஒருபக்கம், திரிஷாவுடனான நட்பு மறுபக்கம் என தவெக தலைவர் விஜய் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் விஜய் குறித்தும், மக்கள் இயக்கத்தில் நிலவும் சூழல் குறித்தும், சில கருத்துக்களை கூறியிருக்கிறார்..
விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.. அப்போது, "அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை. அப்பாவையே பிரிக்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்?
தகப்பன் சந்திரசேகர், விஜய்யின் வாழ்க்கைக்காக உடல், பொருள், ஆவி என அத்தனை தியாகங்களையும் செய்தவர். அவருக்கே உரிய மரியாதை இல்லை" என்றெல்லாம் ஆதங்கப்பட்டு கூறியிருந்தது மீடியாவில் பரபரப்பாக உற்று நோக்கப்பட்டது.

எஸ்ஏசி உருக்கம்
இந்நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு நேர்காணலில் உருக்கமாக எஸ்ஏசி பேசியிருக்கிறார்.. அதில், விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நான் போட்ட அடித்தளத்தையும், அதற்காக தனது தொழிலையே விட்டுக் கொடுத்து உழைத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்..
எஸ்ஏசி பேச்சின் சுருக்கம் இதுதான்: "விஜய்க்கு வெளியே நடக்கும் உண்மைகள் எதுவும் தெரியாதபடி ஒரு "இரும்புக்கூடு" போன்ற வளையத்திற்குள் அவர் வைக்கப்பட்டுள்ளார்.. விஜய்யின் நற்பெயரை கெடுக்கும் வகையில் ஒரு கும்பல் அவருக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறது..
இரும்புக்கூடு வளையம்
அந்த கும்பல் விஜய்க்கு தெரியாமலேயே அவருக்கு பின்னால் ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறது.. உண்மையான விசுவாசிகளை விஜய்யிடம் இருந்து பிரித்து வருகிறது.. இது விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்..
மக்கள் இயக்கத்தில் தற்போதுள்ள நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக ஒரு குழுவை உருவாக்கி, பொய் தகவல்களை விஜய்க்கு அனுப்பி வருகிறார்கள்.. உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல், திட்டமிட்டுத் தவறான பிம்பங்கள் விஜய்யிடம் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு பொய்யை 10 முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற அடிப்படையில், விஜய்யை அவர்கள் திசைதிருப்புகிறார்கள்..
விஜய்க்காக உழைத்தேன்
விஜய்க்காக 15 ஆண்டுகள் உழைத்தேன்.. முதல் படம் தோல்வியடைந்த போதும் மனம் தளராமல் அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கி விஜய்யை மக்கள் மனதில் பதிய வைத்த அந்த அடித்தளமே இன்று அவர் இந்த உயரத்தில் இருப்பதற்குக் காரணம்..
என் மகனுக்கு ஒரு ஆபத்து நேரும்போது, ஒரு அப்பாவாக என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது... எந்தத் தகப்பனும் தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும் என்று நினைக்க மாட்டான்..
இந்தக் கருத்து வேறுபாடுகள் குறித்து விஜய்யிடம் 2, 3 முறை பேசி பார்த்தேன்.. ஆனால் அவருக்கு உண்மை நிலை புரியவில்லை.. அதனால்தான் ஊடகங்கள் வாயிலாக என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன்.. இதன் மூலமாவது விஜய் உண்மையை உணர வேண்டும் என்று விரும்புகிறேன்..
நச்சு வளையம்
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. இது முழுக்க முழுக்க அமைப்பு மற்றும் கொள்கை சார்ந்த முரண்பாடு மட்டுமே..
விஜய்யின் அரசியல் பயணம் சீரியஸாகப் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.. ஒரு நல்ல தலைவராக உருவெடுக்க வேண்டிய அவர் தவறானவர்களின் பிடியில் சிக்கிக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. காலம் ஒருநாள் உண்மையை விஜய்க்கு உணர்த்தும், அப்போது சுற்றியுள்ள நச்சு வளையம் விலகும்" என்று நம்பிக்கை தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன்












Click it and Unblock the Notifications