நேஷனல் அவார்டே கிடைச்ச மாதிரி.. ஏக சந்தோசத்தில் சரத்குமார்! காரணம் நம்ம சச்சின் டெண்டுல்கர் தானாம்!
சென்னை: இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், சரத்குமார், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்த 3 பிஎச்கே திரைப்படம் தியேட்டர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பார்த்து தானும் ரசித்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து தங்கள் படத்தை பார்த்து பாராட்டிய சச்சினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.
இந்த ஆண்டு எதிர்பார்த்த பல படங்கள் தமிழ் திரையுலகில் சொதப்பிய நிலையில் எதிர்பாராமல் பல படங்கள் வெற்றியை குவித்தன. அந்த வகையில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.
அப்படி ஒரு படம் தான் 3 பிஎச்கே ( 3 BHK ) எட்டு தோட்டாக்கள், குருதியாட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தியன் 2 படத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்த சித்தார்த்த இந்த படத்தில் நடித்திருந்தார்.

3 பிஎச்கே படம்
அவருடன் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு நடுத்தர குடும்பத்தின் சொந்த வீட்டு கனவை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஓடிடியிலும் தற்போது வரை ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்
இந்த நிலையில் தேசிய அளவில் இந்த படத்துக்கு கவனம் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில் ரெடிட் இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் சமீபத்தில் பார்த்த படம் என்ன என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர் 3 பிஎச்கே, அட தம்பாய்ச்சா நாய் ஆகிய திரைப்படங்களை பார்த்து ரசித்ததாக கூறியிருந்தார்.
நடிகர் சரத்குமார்
இதை எடுத்து அந்த படம் குறித்து ரசிகர்கள் இணையதளங்களில் தேடி வருவதோடு ஓடிட்டியிலும் பார்த்து ரசித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது படத்தை பார்த்த சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் சரத்குமார். இது தொடர்பாக தனது தளத்தில் பதிவிட்டுள்ள அவர்," அன்புள்ள சச்சின் டெண்டுல்கருக்கு எங்கள் தமிழ் திரைப்படமான 3 பிஎச்கே படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி. 3 பிஎச்கே படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் இந்த அங்கீகாரத்திற்காக மகிழ்ச்சி அடைகிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்.
Dear Sachinji thank you for appreciating our tamil film 3bhk @sachin_rt , the entire team of 3bhk are delighted and happy for the recognition @iamarunviswa @sri_sriganesh89 @Chaithra_Achar_ .
— R Sarath Kumar (@realsarathkumar) August 26, 2025
தேசிய விருது
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை எந்த திரைப்படம் குறித்தும் பாராட்டியதோ அல்லது பொதுவெளியில் பேசியதில்லை முதன்முறையாக அதுவும் ஒரு தமிழ் திரைப்படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தேசிய விருதே கிடைத்தது போல என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications