Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க! நாம் தமிழரின் விவசாயி சின்னத்தை வாங்கிய.. கட்சிக்கு வந்த நிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் அடிமேல் அடி விழுந்து கொண்டு இருக்கிறது.

அந்த கட்சிக்கு ஏற்கனவே பல்வேறு சின்னங்களில் போட்டியிட ஆளே கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல்; மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Sad state of Sugarcane farmer symbol See what happened to the party who opposed Naam Tamilar Seeman

இப்போது அடுத்த திருப்பமாக நாம் தமிழர் கட்சி முன்பு வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை இந்த தேர்தலில் பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பூவரசன் என்பவரின் வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. போதிய ஆவணங்களை கொடுக்கவில்லை என்று கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனுவில் அடிப்படையே தெரியாமல் அந்த கட்சியில் சிலர் வேட்புமனு தாக்கல் செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை பெறுவதற்கு அந்த கட்சி நிர்வாகிங்களிடம் சீமான் பேசியதும் அவர்கள் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.

உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை. என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் போட்டி: நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ஆனால் நாம் தமிழரிடம் சண்டை போட்டு சின்னத்தை வைத்துக்கொண்ட அந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு பல்வேறு சின்னங்களில் போட்டியிட ஆளே கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல்; மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+