சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்! லட்சுமிஹர்க்கு யுவ புரஸ்கார் விருது!
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், யுவ புரஸ்கார் விருது இளம் எழுத்தாளர் லட்சுமிஹர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் நூலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'பால சாகித்ய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் என்ற ஊரில் பிறந்த விஷ்ணுபுரம் சரவணன், முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். கதைசொல்லி, சிறார் எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். ஆனந்த விகடன் விருது, வாசகசாலை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அதே போல் 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் லட்சுமிஹர் எழுதிய நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
இளம் எழுத்தாளர் லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்றவர். திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications