Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார்..ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: :ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய தமிழக எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கர்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்

Sahitya Akademi Bala Puraskar and Yuva Puraskar award Award for 2023: Writer Ram Thangam and Udayasankar

சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதாக பால சாகித்ய புரஸ்கார் விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய உதயசங்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் உதயசங்கர். இவர் நீலக்கனவு, யாவர் வீட்டிலும, பிறிதொரு மரணம், ஆதனின் பொம்மை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

Sahitya Akademi Bala Puraskar and Yuva Puraskar award Award for 2023: Writer Ram Thangam and Udayasankar

அதே போல யுவ புரஸ்கார் விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் ராம் தங்கம். இவர் எழுதி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திருக்கார்த்தியல் இதுவரை 6 விருதுகளை வென்றுள்ளது. தனது விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் ராம் தங்கம். பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது பெறுபவர்களுக்கு விருதுடன் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+