"ஜெய் ஸ்ரீராம்".. இந்துத்துவா பற்றி வீரமாக பேசிய சாய் பல்லவி.. பாயும் வலதுசாரிகள்.. குவியும் ஆதரவு!
சென்னை: இஸ்லாமியர்கள் பசுக்கடத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டு இந்துத்துவா கும்பல்களால் கொலை செய்யப்படும் சம்பவங்கள் குறித்து நடிகை சாய் பல்லவி விமர்சனம் வைத்துள்ளார். காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் பேசி உள்ளார்.
Recommended Video
இணையத்தில் இதற்கு கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 2014க்கு பின்பாக கும்பல் வன்முறைகள் அதிகம் ஆகி உள்ளன. அதிலும் பசு கடத்துவதாகவும், மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும் கூறி இந்துத்துவா கும்பல்கள் பல மாநிலங்களில் இஸ்லாமியர்களை கொன்று வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் உள்ள நிலையில்தான் இந்த கும்பல் வன்முறைகள் அதிகம் நடக்கின்றன.

குழு வன்முறை
இந்த நிலையில் விரத பர்வம் தெலுங்கு படத்திற்காக சாய் பல்லவி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், நான் கொள்கை ரீதியாக நடுநிலையானவள். இடதுசாரிகள்,. வலதுசாரிகளில் யார் சரியானவர்கள், தவறானவர்கள் என்று என்னால் கூற முடியாது. காஷ்மீர் பைல்ஸ் படம் வந்தது. அதில் காஷ்மீரி பண்டிட்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

காஷ்மீர் பண்டிட்கள்
ஆனால் சமீப நாட்களாக பசு எடுத்து சென்றதாக கூறி இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்டனர். அவர்கள் இஸ்லாமியர்களை தாக்கிவிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்புகிறார்கள். இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஒடுக்கப்படும் மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும். அதைத்தான் என் குடும்பம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம்
நீங்கள் மனிதராக இருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும். காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் பேசி உள்ளார். இந்த நிலையில்தான் சாய் பல்லவியின் கருத்துக்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

சாய் பல்லவி
பலர் சாய் பல்லவி கருத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். சாய் பல்லவி தைரியமாக பேசி உள்ளார். அவர் பேசியதுதான் சரி. இந்தியாவில் வெறுப்பு அதிகரித்துவிட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் தாக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர் மீதான தாக்குதல் அதிகம் நடக்கிறது. அதை சாய் பல்லவி தைரியமாக பேசி உள்ளார் என்று பாராட்டி உள்ளனர்.

பயம் இல்லை
இன்னும் சிலர், பல நடிகர்கள் இதை பற்றி பேசுவது இல்லை. அவர்கள் எதற்கோ பயப்படுகிறார்கள். நமக்கு ஏன் வம்பு என்று இருக்கிறார்கள். சாய் பல்லவி அப்படி எதற்கும் பயப்படாமல் பேசி இருக்கிறார். அவரை பாராட்ட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்க வேண்டும் என்று அவர் கூறியதை பாராட்டுகிறோம் என்று பாராட்டி உள்ளனர்.

இந்துத்துவா கும்பல்
அதே சமயம் இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் பலர் சாய் பல்லவியை விமர்சனம் செய்துள்ளனர். சாய் பல்லவி பேசியது சரி கிடையாது. இரண்டையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவர் அவமதித்துவிட்டார். காஷ்மீர் பற்றி தெரியாமல் அவர் பேசுகிறார். அவர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலதுசாரி நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications