சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை மேம்பாலம்.. சென்னை அண்ணா சாலையில் ஜனவரியில் குட்நியூஸ்
சென்னை: சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை இடையே அமைக்கப்படும் இரும்பு பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது தூண்களுக்கு இடையே 'டெக்' என்ற உத்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கி செயல்பட்டு வருகிறார். வருகிற ஜனவரி 7-ந்தேதிக்குள் மேம்பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணியை முடித்து, அனைத்து சாலை தடுப்புகளையும் அகற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 3.2 கி.மீ. தூரத்துக்கு ரூ.621 கோடியில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடித்தளம் அமைக்கும் பணி 98 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.

ஈரடுக்கு மேம்பாலம்
இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள மெட்ரோ இரயில் பாதையின் மேலேயே அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கீழ்த்தளத்தில் எப்போதும் போல் சாலைப் போக்குவரத்து இருக்கும். முதல் தளத்தில் மெட்ரோ இரயில் பாதை இருக்கும். இரண்டாம் தளத்தில் புதிய நான்கு வழி மேம்பாலம் அமைக்கும்.மெட்ரோ தூண்களுக்கு இடையே கூடுதல் தூண்களை அமைத்து, அவற்றின் மேலே பாலத்தைத் தாங்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஸ்டீல் காம்போசிட் கர்டர்கள்
பாலத்தின் பகுதிகள் பாலத்திற்கு வெளியிலுள்ள ஒரு தொழிற்சாலையில் முன்கூட்டியே வார்ப்பு செய்யப்பட்டு, பின்னர் கட்டுமான இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டு வருகின்றன. லான்ஜிங் கிரிட்ஸ் எனப்படும் இந்த தொழில் நுட்பம் மூலம் தூண்களுக்கு இடையே உள்ள இடைவெளி இணைக்கப்படும். இங்கு மெட்ரோ பாதையின் மேலே பாலத்தை அமைக்கும்போது அதிக எடை இருக்கக்கூடாது என்பதற்காக, சில பகுதிகளில் எடை குறைந்த அதே சமயம் அதிக வலிமை கொண்ட ஸ்டீல் காம்போசிட் கர்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
டெக் என்ற உத்திரம்
இதற்கான முன்வார்ப்பு கான்கிரீட் கட்டமைப்புகள் குஜராத், சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தயாரித்து, இங்கு எடுத்து வந்து இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தூண்களுக்கு இடையே 'டெக்' என்ற உத்திரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கான்கிரீட் கட்டமைப்புகள் முறையாக பொருத்தப்பட்டனவா?, முடிந்த பணிகள், இனிமேல் நடக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
ஜனவரி 7ம் தேதி வரை கெடு
வருகிற ஜனவரி 7-ந்தேதிக்குள் மேம்பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணியை முடித்து, அனைத்து சாலை தடுப்புகளையும் அகற்ற உத்தரவிட்டிருக்கிறோம். இதனால் அண்ணாசாலையில் பணிகள் நடக்கும் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அடியோடு குறையும். அடித்தளம் வலுவான தூண்களில் டெக் அமைக்கும் பணியை வேகப்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications