அதிரடி முடிவு.. சட்டென உயர்ந்த சம்பளம்.. குஷியில் ஆடிப்போன ஊழியர்கள்.. வெளியானது சபாஷ் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் முக்கியமான சில ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் இரண்டாவது மாநிலமாக உள்ளது.

இப்போது, 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
முக்கிய அறிவிப்புகள்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கியமான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அறிவிப்பு 1 - தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.
அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.

அடுத்த அதிரடியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.
ஊதிய உயர்வு: இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் முக்கியமான சில ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில் தினக்கூலியாக பணிபுரிபவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊழியர்களுக்கு இத்தனை நாட்கள் தினக்கூலியாக, 424 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 98 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி புதிய ஊதியமாக 522 ரூபாயாக உயர்த்தி, சென்னை மாநகராட்சி உத்தரவிட் டுள்ளது. பணியாளர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை இந்த சம்பளமே பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
8வது சம்பள கமிஷன் மீண்டும் தாமதம்.. ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு.. எதற்காக தெரியுமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications