வங்கி கணக்கை தேடி வரும் ரூ.10000.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக அரசு சார் ஊழியர்களுக்கு என்று அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகம் கேன்டீன்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) பாத்திரங்கள், சமையல் சாமான்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றை புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மெனு மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தி, அட்டவணைகள், விளக்குகள் மற்றும் புதிய பாத்திரங்களைச் சரிசெய்வதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் அம்மா உணவகங்கள் புதிய பொலிவு பெற உள்ளன.
அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: இப்படிப்பட்ட நிலையில்தான் அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கோவில் பணியாளர்கள்: அந்த வகையில் தற்போது கோவில் இசைக்கலைஞர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிதிவசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும்.
நேற்று சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் திருக்கோயில்கள் அதிகம்.
நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. இறைவனிடம் வரம் கேளுங்கள் இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள்.
அறநிலையத் துறையே இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும் இங்கு செல்லாது. நதிகள் முன்னே தான் செல்லும், பின் வந்ததில்லை. அதுபோல் எங்கள் முதல்வர் இலட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை. தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும். மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது.
பண்பாட்டை வளர்த்தோம். பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம் பிரச்சாரத்திற்கு அழைத்து வராதீர்கள், என்று கூறினார்.
முக்கிய அறிவிப்புகள்: இது போக 9 கோடியில் இரண்டு திருக்கோயில்களில் புதிய தங்கத்தேர்கள் செய்யப்படும்.
1) கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில்
2) தென்காசி மாவட்டம், இலஞ்சி அருள்மிகு இலஞ்சிகுமாரர் திருக்கோயில் என்று அறிவிக்கப்பட்டது.
3)மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்பட்டு திருக்கோயில் மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.
4) ரூ.1.58 கோடியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம். என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக அரசு சார் ஊழியர்களுக்கு என்று அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில்தான் நேற்று நிதிவசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000/-தொகுப்பூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications