சேலம் விமான நிலையம் “தனியாருக்கு ஏலம்”.. விரைவில் சேவை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அப்டேட்
சென்னை: சேலம் விமான நிலைய சேவை ஏலம் விடப்பட்டு உள்ளதாக திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் மயமாக்கி வருகிறது.
அந்த திட்டத்தின் கீழ் குஜராத் தலைநகர் அகமதாபாத் விமான நிலையம், கர்நாடகாவின் மங்களூரு விமான நிலையம், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள விமான நிலையம், அசாம் தலைநகர் கவுஹாத்தில் உள்ள விமான நிலையம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் ஏலம் விடப்பட்டு உள்ளன.

திருச்சி, சேலம் நிலையம் ஏலம்
இரண்டாம் கட்டமாக திருச்சி, ஒடிசாவின் புவனேஷ்வர், பஞ்சாபின் அமிர்தசரஸ், சத்தீஸ்கரின் ராய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய 6 விமான நிலையங்கள் ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் குறைந்த வருமானம் வரக்கூடிய சேலம் விமான நிலையமும் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமான சேவை நிறுத்தம்
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் சேலம் மக்களவை தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பினார். அதில், "கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

நேரில் மனு
சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, மக்களவையில் நான் பலமுறை இந்த பிரச்சனையை கேள்வி எழுப்பியுள்ளேன், மேலும் அமைச்சரையும் இதுதொடர்பாக நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். 2022 மார்ச் முதல் சேலத்தில் இருந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று 31.12.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அமைச்சர் பதிலளித்திருந்தார்.

ஏலம் - விரைவில் சேவை
ஆனால் இன்று வரை அதற்கு எந்த அறிகுறியும் இல்லை. தற்போதைய நிலை என்ன? விமான சேவை எப்போது தொடங்கும்? என கேள்வி எழுப்பினேன். இந்த கேள்விக்கு, ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் அவர்கள்,
"சேலம் விமான நிலைய சேவை ஏலம் விடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் விமான சேவை தொடங்குவது விரைவில் உறுதிசெய்யப்படும் எனவும்,இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications