ஆத்தூர்ல.. வருஷா வருஷம் கரெக்டா வந்துரும் இந்த ஆலங்கட்டி மழை!
சென்னை: கோடை மழைன்னு ஒண்ணு இருக்கறதே பாவம் நம்ம சென்னை வாசி குழந்தைகளுக்கு தெரியாது. அப்படி ஆகிப் போச்சு நம்மளோட மழை நிலவரம்.
வெயில்.. கொளுத்தும் வெயில் இதுதான் இவங்களுக்கு கோடை காலத்துக்கான அடையாளம். பீச், பார்க், சினிமா தியேட்டர், இன்னும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைச்சுட்டு போய், கோடை பொழுதை வெயிலோட கழிப்பாங்க.

என்னதான் காவிரி நதி ஓடும் புண்ணிய பூமியாக காவிரி டெல்ட்டா பகுதி இருந்தாலும், அங்கும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோடை மழை பெய்வதை வானம் நிறுத்திக்கிச்சு.
ஆனால், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், ஏற்காடு,சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு போன்ற ஊர்களில் கோடை மழை தப்பாமல் பெய்து விடும். சில சமயம் தலைகாட்டிப் போகும் மழை, பல சமயங்களில் விடாது அடை மழையாகவும் பெய்யும்.

இதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தா ஆலங்கட்டி, பெரும் காற்றுடன் மழை பெய்யும் பாருங்க.. அது காணக்கோடி இன்பம். வருஷம் தவறினாலும், கோடை மழை என்று ஒன்று இந்த பகுதிகளில் தலை காட்டாமல் போனதே இல்லை.
ஆலங்கட்டி மழை பெய்தால் ஒட்டு வீடு என்றால் அதில் அந்த ஆலங்கட்டி பட்டு உடைந்து சிதறி முற்றத்தில் விழும் .. குழந்தைகள் எடுக்க ஆவலாக ஓடினால் தூள் தூளாகத்தான் ஆலங்கட்டி கிடைக்கும். அது தெருவில் நின்று எடுத்தால் பெரிய பெரிய ஆலங்கட்டிகள் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு இந்த கோடை மழை எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். நேற்று ஒன்றரை மணி நேரம் சேலம் ஆத்தூர், தம்மம்பட்டி, மல்லியக்கரை, பெத்தநாயக்கன் பாளையம், சொக்கநாதபுரம் போன்ற ஊர்களில் விடாமல் கோடை மழை அடை மழையாக பெய்திருக்கிறது. அதுவும் ஆலங்கட்டிகளுடன்..

சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர்..வீ ட்டு முற்றங்கள் மூழ்கி, தாழ்வாரம் வரை தண்ணீர் என்று வேடிக்கை காட்டிவிட்டு போயிருக்கிறது கோடை மழை. வரவேற்போம் மாமழையை..!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications