வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. பல மாவட்டங்களில் இடியுடன் கனமழை - வானிலை மையம்
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடியும் நேரம் வந்து விட்டது வடகிழக்குப் பருவமழை துவங்கப்போகிறது. அதற்கு முன்னதாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 48 மணிநேரத்தில் மழை எங்கெங்கு பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை, தருமபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
19ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications