Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் மீனவர் சுட்டுக்கொலை.. முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம்.. கர்நாடக வனத்துறைக்கு கண்டனம்

கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் ராஜாவை உயிரிழப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் ராஜாவை அம்மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜா இறந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் தான் கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்த ராஜா வழக்கம்போல் செட்டிப்பட்டி ரவி உள்ளிட்டோருடன் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அடிபாலாறு பகுதியில் அவர்கள் சென்ற நிலையில் கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் பயந்த மீனவர்கள் அங்கிருந்து ஓடினர். ராஜாவுடன் மீன்பிடித்த அனைவரும் வீடு திரும்பிய நிலையில் அவர் மட்டும் வீட்டுக்கு வரவில்லை.

துப்பாக்கிச்சூட்டில் ராஜா பலி

துப்பாக்கிச்சூட்டில் ராஜா பலி

இந்நிலையில் அவரின் உடல் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் பாலாற்றில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகின்றனர். மான் வேட்டையாட சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கர்நாடகா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநில எல்லையில் பதற்றம்

மாநில எல்லையில் பதற்றம்

மேலும் இந்த சம்பவம் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு செக்போஸ்ட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகளவு போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் ராஜா உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரம், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடுமையான கண்டனங்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் இருப்பது என்ன?

அறிக்கையில் இருப்பது என்ன?

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா என்ற காரடைவயான் உள்ளிட்ட 7 பேர் கடந்த 14ம் தேதி காவிரியாற்றில் மீன்பிடிக்க சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடகா மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராஜாவின் டல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

ரூ.5 லட்சம் நிவாரணம்

இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+