அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மனு திடீர் வாபஸ்!
சென்னை: குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட நால்வரையும் முதலில் இடை நீக்கம் செய்த துணைவேந்தர் பின்னர் அவர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிராகவும், சட்ட விதிகளுக்கு விரோதமாகவும் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் இருவரும், பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டதாக விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர கடந்த மாதம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டார்.
பின்னர் சேலம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள மனு அளித்தனர்.
இந்தநிலையில் தொழிலாளர் நலத்துறையின் அரசு உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் துணைவேந்தர் ஜெகநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை முன்கூட்டியே தாக்கல் செய்து விட்டதாகவும், குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு பின்பு இங்கு வழக்கு தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications