சேலத்தில் நிஜமாகவே மோடிக்கு "நண்பர்" இருந்தாரா? பிரதமரை கலங்கடித்த ரத்தினவேல் யார்? திமுக பார்க்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

Salem PM Modi speech and did modi have a friend in salem Who is Salem Rathinavel

வரவேற்பு: கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு பிரதமர் வந்தபோது, அன்புமணி ராமதாஸ் உட்பட பல தலைவர்கள், கை குலுக்கி வரவேற்றார்கள்.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார், அன்புமணி, என அனைத்து கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.. அப்போது பிரதமர் மோடி பேசும்போது, கடந்த 2 முறை ஆட்சிக்காலத்தில், பாஜக கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

"பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. பாரத அன்னை வாழ்க.." என்று தமிழிலேயே தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார்... தமிழகத்தில் பாஜகவும் எனக்கும் கிடைக்கும் இந்த வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது...

பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவுக்கு தூக்கமே போய்விட்டது. தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவு செய்துவிடடார்கள்.. ஏப்ரல் 19ம் தேதி விழப்போகிற எல்லா ஓட்டும் பாஜகவுக்கு தான்.

நானூறை தாண்டனும்: மறுபடியும் தமிழில் பேசிய மோடி, "400க்கும் மேல.. நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்டை வேண்டும்... பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும்.. விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும்... இந்த முறை வேண்டும் 400க்கு மேல..." என்றார்.

தொடர்ந்து மோடி பேசும்போது, "இதே சேலத்திற்கு நான் பலமுறை வந்திருக்கிறேன்.. இன்னைக்கு எனக்க பல நினைவுகள் வருகின்றன. சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர்தான், எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். கடந்த 40-50 வருடங்களுக்கு முன்பு, கைலாஷ் யாத்திரை சென்றேன். அப்போது சேலத்தை சேர்ந்த ரத்தின வேல் என்பவர் என்னுடன் வந்தார்..

ஈர்ப்பு: சேலத்தின் பெருமைகளை எல்லாம் அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது முதல் சேலத்தின் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தவர், இப்போது நம்மிடம் அவர் இல்லை. அவரின் நினைவுகள் மட்டுமே உள்ளது. "பாஜகவுக்காக உழைத்து உழைத்து, உயிரை விட்டவர் ஆடிட்டர் ரமேஷ்" என்று சொன்ன மோடி, பொதுக்கூட்ட மேடையிலேயே திடீரென கண்ணீர் விட்டார்.

கோட்டை மாரியம்மன் வாசலில் "ஓம் சக்தி" என்று எழுதப்பட்டிருக்கிறது.. மாரியம்மனை சக்தி வடிவமாக வழிபடுகிறோம். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி அம்மன் சக்தி வடிவமாக இருக்கிறார்கள்..

சமயபுரம் மாரியம்மன்: கன்னியாகுமரியில் ஒரு சக்தி வழிபாட்டுக்கு உரியவராக உள்ளார். சக்தி வாய்ந்த தெய்வம் சமயபுரம் மாரியம்மன். சக்தி மிக்க தெய்வங்கள் எல்லாம் பெண் வடிவில் உள்ளனர். சக்திக்கு மிகப்பெரிய அர்த்தம் உள்ளது. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணியோ, சக்தியின் வடிவத்தையே - சனாதனத்தையே - அழித்துவிடுவோம் என்கிறார்கள்.. இதனை நாம் அனுமதிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார் மோடி.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவரை பற்றி மோடி திடீரென சொல்லவும், இதுகுறித்து இணையவாசிகள் கேள்விகளையும், சில சந்தேகங்களையும் எழுப்பி வருகிறார்கள்.

சந்தேகம்: நிஜமாகவே மோடிக்கு சேலத்தில் ஒரு நண்பர் இருந்தாரா? இல்லை சேலத்தில் பேசுவதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்கிறாரா? சேலம் மக்களை ஈர்ப்பதற்காக இப்படி சொல்கிறாரா? இதற்கு முன்பு எத்தனையோ முறை தமிழகத்துக்கு வந்து போனபோதெல்லாம் ரத்தினவேல் பற்றி சொல்லாமல், சேலத்தில் பேசும்போது மட்டும் சொல்கிறாரே? என்று கேட்டு வருகிறார்கள்..

பிரதமர் மோடியின் கண்களையே கலங்கவிட்ட அந்த ரத்தினவேல் யாராக இருக்கும்??? என்று தெரியவில்லை. ஆனாலும், பிரதமரின் நெகிழ்ச்சி பேச்சு அனைவரையும் ஈர்க்க செய்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+