புருஷனுக்கு கல்யாணம்.. ’காதல்’ அரசனுடன் உலாவும் சமந்தா! விரைவில் டும் டும் டும்.. அமெரிக்காவில் ஜாலி
சென்னை: நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு நடிகை சமந்தா தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தாவும் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலாவி வருகின்றன. இந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவில் ராஜ் நிடிமோருடன் விடுமுறையை கழித்த புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா மூலம் அறிமுகமாகி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கி வருகிறார்.
விஜய் தொடங்கி சிரஞ்சீவி வரை பல முன்னணி நாயகர்களுடன் கரம் கோர்த்த அவர் தமிழில் சில நடிகர்களுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைத்தன்யாவை காதலிப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. இடையில் அவருக்கு மயோசிடிஸ் எனும் அரியவகை தசை சிதைவு நோய் ஏற்பட்டது. நோய் இருப்பதால் தான் நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து விட்டார் என்ன நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ராஜ் நிடிமோருடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே திருமணம் ஆகி ராஜ் நிடிமோருவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தனது கணவரை சமந்தா பறித்து விட்டதாக மறைமுகமாக போஸ்ட் போட்டு வந்தார் ராஜ் நிடிமோருவின் மனைவி.
தற்போது சமந்த தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை ராஜ் நிடிமோரு தயாரித்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் கூட துபாய்க்கு ராஜ் நிடிமோருடன் சென்றிருந்தார் சமந்தா. இந்த நிலையில் அமெரிக்காவில் ராஜ் நிடிமோருடன் உலாவிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க தெலுங்கு அமைப்பு சார்பில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ராஜ் நிடிமோரு உடன் சமந்தா பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க வீதிகளில் ராஜ் நிடிமோருடன் ஒன்றாக உலா வரும் புகைப்படங்களையும் நண்பர்களுடன் உணவகத்தில் உணவு அருந்தும் புகைப்படங்களையும் சமந்தா வெளியிட்டிருக்கிறார்.
நாக சைதன்யாவுடன் திருமண வாழ்வு முடிவுக்கு வந்த நிலையில் சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது ராஜ் நிடிமோருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை இருவரும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications