சமந்தாவுடன் விவாகரத்து ஏன்? அரசியல்வாதியுடன் தொடர்புப்படுத்திய பெண் அமைச்சரை திட்டிய நாக சைதன்யா
சென்னை: நடிகை சமந்தா, நாகசைதன்யாவை பிரிய தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பெண்அமைச்சர் கொண்டா சுரேகா கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை நடிகர் நாகசைதன்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, சமந்தா விவகாரத்தில்
நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர். நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார்.

சமந்தா இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியுள்ளார்.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் நாக சைதன்யா, பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛விவாகரத்து என்பது அதிக வலி கொடுக்கும் ஈஸியான வலி மட்டுமின்றி வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான ஒரு முடிவாக இருக்கிறது. பல சிந்தனைகளுக்கு பிறகு பரஸ்பரமாக நானும், எனது முன்னாள் மனைவியும் (சமந்தா) இந்த முடிவை எடுத்தோம்.
"என் விவாகரத்துக்கு கேசிஆர் மகன் தான் காரணமா?" கொளுத்திப்போட்ட பெண் அமைச்சரை விளாசிய நடிகை சமந்தா
இந்த விவாகரத்து என்பது அமைதி, இருவரின் வேறுபட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தை மனதில் வைத்து இருவரும் ஒவ்வொருவருரின் எண்ணங்களை புரிந்து கொண்டு எடுத்த முடிவாகும். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் அபத்தமான மற்றும் ஏற்க முடியாத வதந்திகள் பரப்புகிறது. எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மதிப்பளித்து நான் இதுபற்றி வெளியில் எதுவும் பேசாமல் இருந்தேன்.
ஆனால் இன்று, அமைச்சர் கொண்டா சுரேகா தவறான தகவலை கூறியது மட்டுமில்லாமல், அபத்தமான, ஏற்க முடியாத கருத்தை தெரிவித்துள்ளார். பெண்கள் என்றைக்குமே மதிக்கப்பட வேண்டியவர்கள். மீடியாவில் ஹெல்லைனில் வர வேண்டும் என்பதற்காக செலிபிரிட்டிகளில் தனிப்பட்ட வாழ்க்கையில் அட்வான்டேஸ் எடுத்து கொள்வது அவமானத்துக்குரியது’’ என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications