சமந்தாவுக்கு வந்த கோபம்! என் விவாகரத்துக்கு கேசிஆர் மகன் தான் காரணமா? பெண் அமைச்சரை மீது ‛அட்டாக்’
சென்னை: நடிகை சமந்தா, நாகசைதன்யாவை பிரியா பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பெண்அமைச்சர் கொண்டா சுரேகா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் கோபமடைந்துள்ள சமந்தா, பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இவரது அமைச்சரவையில் கொண்டா சுரேகா என்பவர் கேபினட் அமைச்சராக உள்ளார். கொண்டா சுரேகா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தாவின் விவாகரத்து பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். அதாவது நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார். சமந்தா இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் தனது பாதையில் பயணித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று அமைச்சர் கொண்டா சுரேகா பேசியுள்ளார். கேடி ராமராவ் என்பவர் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் ஆவார். அதோடு தெலுங்கானாவில் முன்பு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடந்தபோது கேடி ராமராவ் அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி! திருப்பதி லட்டு சர்ச்சையில் பவன்கல்யாணிடம் வருத்தம்
அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் தான் நடிகை சமந்தா கடும் கோபமடைந்துள்ளார். தன்னை பற்றி தவறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி அமைச்சர் கொண்டா சுரேகாவை அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அந்த ஸ்டோரியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு பெண்ணாக வெளியே வந்து பணி செய்து பெண்களை முட்டுக்கட்டைகளாக கருதாத துறையில் சாதித்து வாழவும், காதலில் விழவும், காதலில் இருந்து விலகவும், அதற்காக தற்போது வரை எழுந்து நின்று சண்டையிட அதிகமான தைரியமும், வலிமையும் தேவையாக இருக்கிறது. இந்த விஷயத்துக்கான பயணத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அதனை கொண்டா சுரேகா காரு சிறுமைப்படுத்தாதீர்கள்.'
ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்? மோடியிடம் இருந்து வந்த போன்கால்.. மனைவி லதா கொடுத்த அப்டேட்
ஒரு அமைச்சராக நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் உங்களின் பொறுப்புக்கு பொருத்தமானதாக இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். இதனால் அதைப்பற்றிய உங்களின் யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமாக நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை.
தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications