ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்? மோடியிடம் இருந்து வந்த போன்கால்.. மனைவி லதா கொடுத்த அப்டேட்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு போன் செய்து பேசினார். அப்போது ரஜினிகாந்தின் உடல்நலம் பற்றி லதா ரஜினிகாந்த் பிரதமர் மோடியிடம் விளக்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். டிஜே ஞாவேல் தயாரித்த வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், ராணா, பகத் ஃபாசில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கான புரோமோஷன் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ரஜினிகாந்த் நலமாக உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்ப உள்ளார். தற்போது ரஜினிகாந்தை அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்தை அவருடைய மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்டோர் கவனித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்துள்ளார். அதோடு ரஜினிகாந்த் பூரண நலமடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விஷயத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை, ‛‛ பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் லதா ரஜினிகாந்தை இன்று (அதாவது நேற்று) தொடர்பு கொண்டு பேசினார். ரஜினிகாந்தின் உடல்நலம் பற்றி அவர் கேட்டறிந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்தின் உடல்நலம் பற்றி பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்ட பிரதமர் மோடி ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்'' என குறிப்பிட்டார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications