மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி! திருப்பதி லட்டு சர்ச்சையில் பவன்கல்யாணிடம் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க மறுத்து சிரித்த நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நடிகர் கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் கார்த்தி ‛மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கி உள்ளார். படத்தில் நடிகை ஸ்ரீவித்யா, நடிகர்கள் அரவிந்த் சாமி, ராஜ்கிரண் உள்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கார்த்திக் அண்ணியான நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தயாரித்துள்ளார்.

tirupati laddu karthi pawan kalyan

இந்த ‛மெய்யழகன்' திரைப்படம் வரும் 27 ம்தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த படம் ஆந்திரா, தெலுங்கானாவிலும் ரிலீசாக உள்ளது.

இதையடுத்து நேற்று நடிகர் கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது திருப்பதி கோவில் லட்டு சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி பெண் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அப்போது நடிகர் கார்த்தி, ‛‛நாம் இப்போது லட்டு பற்றி எதுவும் பேச வேண்டாம். இது சென்சிட்டிவ்வான டாபிக். இதனை பேச விரும்பவில்லை. லட்டு இப்போது வேண்டாம்.'' எனக்கூறி சிரித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு விஷயத்தை கிண்டலாக எடுத்து கொண்டு சிரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடிகராக இருந்து ஆந்திர துணை முதல்வராக பொறுப்பு வகித்து வரும் பவன் கல்யாணிடம் விஜயவாடாவில் வைத்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பவன் கல்யாண் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண், ‛‛லட்டு பற்றி சிலர் காமெடி செய்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகளில் இதனை நான் பார்த்துள்ளேன். லட்டு சென்சிட் விஷயம் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். தயவு செய்து அப்படி எதுவும் சொல்ல முயற்சி செய்யாதீர்கள். நான் நடிகர்களை மதிக்கிறேன். அதேவேளையில் சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு விஷயத்தை கூறும் முன்பு 100 முறை யோசித்து சொல்ல வேண்டும்.

அதற்கு பவன் கல்யாண், ‛‛திருப்பதி லட்டு பற்றி யாரும் விவாதிக்க விரும்பினால் அதனை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வரவேற்க வேண்டும். அதனை ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விஷயங்களிலும் கருத்து சொல்வதை நிறுத்த வேண்டும்'' என்றார். மேலும் கார்த்தி தொடர்பான கேள்விக்கு, ‛‛இதற்கு கூட பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையா?'' என கேள்வி எழுப்பி அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தார்.

இந்நிலையில் தான் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டியர் பவன் கல்யாண், உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நான் நம் மரபுகளை மதித்து நடக்கிறேன்'' என கூறியுள்ளார்.

முன்னதாக திருப்பத கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பு சர்ச்சையை கிளப்பியது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டுவில் விலங்குகள் கொழுப்புகள் கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். மேலும் லட்டு குஜராத் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு வெளியான அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.

அதில் திருப்பதி கோவில் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயாபீன் உள்பட மேலும் சிலவற்றை குறிப்பிட்டு அதில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையான நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்த விஷயத்துக்கு நேற்று திருப்பதி கோவில் பரிகார பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+