Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமந்தாவை அடிச்சுக்க முடியாது..சைதன்யாவை சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்! சண்டையில் சிக்கிய சோபிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாக சைதன்யா உடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு பிறகு திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது திடீரென ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார். சமந்தாவை வைத்து நாக சைதன்யாவையும், சோபிதாவையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி அதற்குப் பிறகு விஜய், சூர்யா என முன்னணி நாயகர்களுடன் கரம் கோர்த்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் சமந்தா. அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

சினிமாவில் பிஸியாக இருக்கும் போது பல நாயகர்களுடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல நட்சத்திர குடும்பத்தில் இணைந்தார். தமிழ் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வந்த நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Samantha Naga Chaitanya cinema

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார். தொடர்ந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா ஜோடி பிரிந்தது. திரையுலகில் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் சில நாட்களில் சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கூறிய நாக சைதன்யா அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பலரும் நாக சைதன்யா குடும்பத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். சோபிதாவும் கேலி கிண்டலுக்கு ஆளானார். இது ஒரு புறம் இருக்க மயோசிடிஸ் என்ற அரிய வகை தசைவு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை ஒரு புறம் சினிமா ஒருபுறம் என பிசியாக இருந்து வரும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இதுவரை குறையவில்லை. இந்நிலையில் தான் சமந்தாவை வைத்து நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சமந்தாவை பிரிந்த சில நாட்களிலேயே நடிகை சோபிதா திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செக்சனை ஆப் செய்து வைத்திருந்தார். இதற்கிடையே சோபிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி நாக சைதன்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த முறை கமெண்ட் செக்சனை ஆப் செய்யவில்லை. இதை அடுத்து சமந்தாவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் நாக சைதன்யாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Samantha Naga Chaitanya cinema

சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா? சமந்தா தான் மிக அழகு, சமந்தாவை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது என கமெண்ட் செய்து வருகின்றனர். நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டிருக்கும் சோபிதாவும் பிரபல நடிகை தான். சமீபத்தில் கூட தமிழில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவின் குடும்பமே திரை உலகை சேர்ந்தது நாகார்ஜுனா, தாய் அமலா, மனைவி சோபிதா என அவரது குடும்பமே திரைத்துறையில் தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+