மேட்டர் கன்பாஃர்ம்.. துபாய்க்கு பறந்த சமந்தா! கூடவே போனது இவரா? கண்ணாடியில் தெரிந்த உருவம்! அவரா?
சென்னை: அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை சமந்தா. பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் அவர் காதலில் இருப்பதாக கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் உலவுகிறது. சமந்தாவும் அதனை மறுக்கவில்லை. இந்த நிலையில் துபாய்க்கு சென்ற சமந்தா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் . அதை வைத்து சமந்தாவுடன் ராஜ் நிடிமோருவும் சென்றிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் நெட்டிசன்கள்.
தென்னிந்திய சினிமா மூலம் அறிமுகமாகி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கி வருகிறார்.
விஜய் தொடங்கி சிரஞ்சீவி வரை பல முன்னணி நாயகர்களுடன் கரம் கோர்த்த அவர் தமிழில் சில நடிகர்களுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைத்தன்யாவை காதலிப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. இடையில் அவருக்கு மயோசிடிஸ் எனும் அரியவகை தசை சிதைவு நோய் ஏற்பட்டது. நோய் இருப்பதால் தான் நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து விட்டார் என்ன நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ராஜ் நிடிமோருடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே திருமணமான ராஜ் நிடிமோருவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தனது கணவரை சமந்தா பறித்து விட்டதாக மறைமுகமாக போஸ்ட் போட்டு வந்தார் ராஜ் நிடிமோருவின் மனைவி.
தற்போது சமந்தா தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை ராஜ் நிடிமோரு தயாரித்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் துபாய் சென்றிருக்கிறார் சமந்தா. அவருடன் ராஜ் நிடிமோருவும் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் ஒன்றாக சென்றதாக சமந்தா சொல்லவில்லை. ஆனால் ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
சமீபத்தில் துபாய் சென்ற புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமும், சன் கிளாஸ் அணிந்தபடி இருந்த ஒரு புகைப்படமும் இருந்தது. சமந்தாவுக்கு அருகில் துப்பாக்கியோடு இருப்பது ராஜ் நிடிமோரு தான் என்கின்றனர் ரசிகர்கள். அதேபோல சமந்தாவின் கண்ணாடியில் ஒருவரின் உருவம் தெரிகிறது. அதுவும் ராஜ் நிடிமோரு தான் என்கின்றனர்.
அதாவது வேண்டுமென்றே தனது சன் கிளாஸில் ராஜ் நிடிமோருவின் உருவம் தெரிய வேண்டும் என்பதற்காகவே சமந்தா அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர். கடந்த வாரம் தனது கணவரை சமந்தா அபகரித்து விட்டார், எனது வாழ்வில் வந்த சனியே அவர் தான் என்பது போல ராஜ் நிடிமோருவின் மனைவி சமூக வலைதளப் பதிவை வெளியிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே மறைமுக மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சமந்தா தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications