சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோட் பண்ணீங்களா? அதே நீதிபதிகள்.. ஜூனில் போன எடப்பாடியின் தூக்கம் - செப்டம்பரில் கிடைத்த நிம்மதி

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக முடியாமல் தடுக்கும் வகையில் அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று மீண்டும் அவரது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கிடைக்க செய்துள்ளது.

தர்ம யுத்தத்திற்கு பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தலைமை பொறுப்பை ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்தால் எடப்பாடியின் அதீத பலம் காரணமாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியவில்லை. 2021 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் விரும்பிய ஓபிஎஸின் திட்டமும் நிறைவேறவில்லை.

இந்த நிலையில்தான், கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக்குவது என்று அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.

பொய் றெக்க கட்டி பறக்குமாம்.. 'உடனிருந்தே கொல்லும் வியாதிகள்’ - ஓபிஎஸ் மீது எடப்பாடி சரமாரி அட்டாக்! பொய் றெக்க கட்டி பறக்குமாம்.. 'உடனிருந்தே கொல்லும் வியாதிகள்’ - ஓபிஎஸ் மீது எடப்பாடி சரமாரி அட்டாக்!

பொதுக்குழுக்கு எதிரான வழக்கு

பொதுக்குழுக்கு எதிரான வழக்கு

இதனை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவுக்கு நீதிமன்றத்தில் தடைகோரியது. ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முதல்நாள் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது.

துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு

துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு

அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மனுவை நள்ளிரவில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அதில் பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் ஆனால், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

ஜெயச்சந்திரன் அமர்வு

ஜெயச்சந்திரன் அமர்வு

இதனை அடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக புதிய பொதுக்குழுவில் கூட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு ரத்து

தீர்ப்பு ரத்து

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அதே அமர்வு

அதே அமர்வு

இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக மாறியுள்ளதுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உறுப்பினர் பொறுப்புக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் ஆண்டு விடியற்காலை பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பளித்த அதே துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வுதான் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராகும் வகையில் தீர்ப்பளித்துள்ளது.

English summary
Same Duraisamy and Sundarmohan Highcourt bench gave judgement in Aiadmk case, but now Edappadi Palaniswami is happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X