ரகசிய கேமராவில் நிர்வாண வீடியோ.. மிரட்டியே பெண்களுடன் உல்லாசம்.. ஹாஸ்டல் வழக்கில் போலீஸ் ஷாக்
Recommended Video

சென்னை: சென்னை பெண்கள் ஹாஸ்டலில், ரகசிய கேமரா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஆதம்பாக்கத்தில், சம்பத்ராஜ் என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்களுக்கு தெரியாமல் 6 இடங்களில் கேமரா வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஹாஸ்டல் செயல்பட தொடங்கி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 7 பெண்கள் அங்கே தங்கியிருந்தனர். அவர்களை இவர் ரகசிய கேமராக்களை வைத்து படம் எடுத்துள்ளார்.

கேமரா கண்டுபிடிப்பு
சமீபத்தில், ஒரு பெண், ஹேர்ட்ரையர் பயன்படுத்துவதற்காக பிளக் சோக்கெட்டை பயன்படுத்தியபோது, உள்ளே கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஹாஸ்டல் பாத்ரூம், பெட்ரூம் என பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதியில் உள்ள 3 குளியலறைகளில் இருந்த மின்சார பிளக்குகளிலும், படுக்கை அறையில் இருந்த எல்.இ.டி. குண்டு பல்புகளிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நவீன கேமராக்கள்
இதையடுத்து ஆதம்பாக்கம் காவல்துறையினரால், சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் சம்பத்ராஜ் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுவதாவது: சம்பத்ராஜ் அதிநவீன கேமராக்களை பொறுத்தியுள்ளார். தொடர்ந்து 5 மணி நேரம் என்றாலும் அவை இயங்கக்கூடியவை.

சத்தத்தை வைத்து இயங்கும்
யாராவது நடமாடினாலோ, கதவு திறக்கும் சத்தம் கேட்டாலோ தானாகவே இந்த கேமராக்கள் இயங்கும். சத்தம் நின்றுவிட்டால் இயக்கமும் நின்றுவிடும். இதன் மூலம், வீணாக கேமரா இயங்கி சக்தி வீணாகாது. இப்படியான எனவே பெண்கள் பாத்ரூம் கதவை திறந்ததும் ஆன் ஆகும் கேமரா, அவர்கள் வெளியே சென்றதும், நின்றுவிடும்.

உளவுத்துறை
இப்படியான கேமராக்கள் உளவுத்துறையால் பயன்படுத்தப்படுவது. அவை சம்பத்ராஜுக்கு எப்படி கிடைத்தன, வேறு யாருக்கும் இந்த கேமராவை வாங்கி கொடுத்தாரா என்பது பற்றியும், போலீசார் விசாரிக்கிறார்கள். இதற்கு முன்பாக சில இடங்களில், கேமரா மூலம் சேகரித்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பெண்களை மிரட்டி சம்பத்ராஜ் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது செல்போன்கள், லேப்டாப்பில் கிடைத்துள்ள வீடியோக்களை வைத்து போலீசார் அதுகுறித்து விசாரிக்கிறார்கள். மேலும் பலருக்கும் பெண்களை சம்பத்ராஜ் விருந்தளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பத்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

உஷார்
இதனிடையே விடுதியில் உள்ள பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து முன்னாள் காவல் அதிகாரி சீதாராமன் கூறுகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கத்தினர் விடுதிகளில் என்னென்ன நடைபெறுகிறது என்பது குறித்து ஆலோசிக்கவேண்டும் என்று கூறுகிறார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications