”தீட்டு” என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டதுதான் சனாதனம்: மீண்டும் தாக்கும் திருமாவளவன்!
சென்னை: ஜாதிய தீட்டு, சமூகங்களிடையே தீட்டு, பெண்களுக்கு தீட்டு என தீட்டு என்பதை அடிப்படையாக கொண்டதுதான் சனாதனம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் மலேசியா எழுத்தாளர் பெ இராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தொல்.திருமாவளவன் பேசியதாவது: சனாதனம் என்பது சமத்துவத்தை மறுக்கிறது. சனாதனம் என்பது சகோதரத்துவத்தை மறுக்கிறது. தந்தை பெரியார் காலத்தில் இருந்தே பேசப்படுகிற சொல்தான் சனாதனம். இன்று புதியதாக பேசுவது அல்ல. அயோத்திதாச பண்டிதர் காலத்தில் ஆரியம் என்று சொல்லப்பட்டதே பின்னர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் பார்ப்பனியம் என அழைத்தோம். அதுவே இன்றைய இந்துத்துவா.

சனாதனம் என்பது ஒரு பெண் என்பவள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்கிறது; ஆணின் இச்சைக்கு உரியவள் என்கிறது. வாரிசுகளைப் பெறக்கூடிய இயந்திரம் என்கிறது. இதுதான் சனாதனம் வலியுறுத்தக் கூடியது. அதாவது சனாதனம் என்பது அழியாதது- நிலையானது என சொல்லப்படுகிறது. பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை நிலைப்படுத்துகிறது.
எந்த ஒரு கடவுளுமே இப்படியெல்லாம் பாகுபாடு காட்டு என்று சொல்வது இல்லை. மதத்தை பரப்புகிறவர்கள்.. கடவுளை பரப்புகிறவர்கள்தான் இந்த பாகுபாட்டை வளர்க்கின்றனர். எந்த ஒரு மதத்திலுமே சொல்லப்படாதது தீட்டு கொள்கை. ஆனால் சனாதனம் தீட்டு கொள்கையை வலியுறுத்துகிறது.
தீட்டு என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதானது மட்டும் அல்ல. ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயும் கூட தீட்டு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் கருத்தியல் தீட்டு இருக்கிறது. அனைத்துவிதமான பெண்களுக்கும் தீட்டு இருக்கிறது. அதுவும் பிராமண பெண்களோ, சூத்திரப் பெண்களோ பெண்கள் அனைவரையுமே சூத்திரர்கள் என்கிறது சனாதனம். மாதவிடாய் காரணத்தை காட்டி பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காதது தீட்டு. இப்படியான ஒரு தீட்டு எந்த ஒரு மதத்திலுமே இல்லை. இப்படியான தீட்டு கொள்கைதான் சனாதனம். பிராமணர் சமூகங்களுக்கு இடையே கூட தீட்டு உண்டு.
அதேபோல அகமண முறை அதாவது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த ஒரு மதத்திலும் இல்லை. பிற மதங்களில் ஆண், பெண் இடையேயான பாகுபாடு இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் இத்தகைய அகமண முறை என்பது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சனாதனத்தில்தான் இருக்கிறது. ஆகையால்தான் சனாதனம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது என்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications