சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது.. கோர்ட்டுக்கு வாங்க பார்த்துக்கலாம்.. காட்டமாக பேசிய திருமாவளவன்
சென்னை: சனாதனம் சமத்துவத்தை போதிக்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு வாருங்கள் விவாதிக்கலாம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளாவன் காட்டமாக சாடியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் பேசியதாவது:- வருகிற செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்திற்கு மாறானது.
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 5 நாட்கள் மட்டும் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கிற கூட்டம் நடக்கிறது. இதில் நானும் கலந்துகொள்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில், ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்த சட்ட மசோதா கொண்டு வர இருக்கிறார்கள் என்ற யூகம் பரவலாக இன்றைக்கு பேசப்படுகிறது.
இது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி. ஆகவே எதிக்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை முறியடிக்க என்ன வியூகங்களை அமைப்பது என்பது குறித்து நாளை மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன். அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை.. எப்படி தொற்று நோய்களை நாம் ஒழித்தாக வேண்டுமோ? அப்படி இதையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியதை இன்றைக்கு தேசிய பிரச்சினையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே பேசும் நிலை உருவாகியிருக்கிறது. இது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகிற ஒன்றாகும்..
இது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்ற ஒரு தோற்றத்தை திரிபுவாதத்தை ஒரு உயர் பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது. சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது என்பதால் தான் அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்பதை அமைச்சர்களே இன்னும் புரிந்துகொள்ளாமல் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்வது எந்த வகையில் ஏற்புடையது அல்ல. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "இது 100 சதவீதம் திரிபுவாத அரசியல்.. சனாதனம் என்பது எந்த இடத்திலும் சமத்துவத்தை போதிக்கவில்லை. எனவே அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும்.. இதை விவாதிப்போம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?.. சாத்தியமில்லையா என்பதல்ல பிரச்சினை.. வேண்டுமா?.. அல்லது வேண்டாமா? என்பது தான் பிரச்சினை. ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்பது தான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
அது ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும், அரசியல் சட்டத்திற்கான மதிப்பீடுகளை சிதைக்கும். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும். ஏதேச்ச அதிகாரம் தலைதூக்குவதற்கான போக்கிற்கு இடம் கொடுக்கும். மாநில உரிமைகளை பறிக்கும். ஆகவே இதனை வேண்டாம் என்கிறோம்.. பாஜக என்ன முடிவு எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதை அப்படியே அதிமுக ஆதரிக்கும். அவர்களுக்கு வேறு வழியில்லை.
மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். ஒன்றினையமாட்டார்கள் என்று நினைத்தார்கள்.. தற்போது 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. இதனால் பாஜகவுக்கு நடுக்கமும் பயமும் ஏற்பட்டுவிட்டது. இதனால் வாய்க்கு வந்த மாதிரி பேசிக்கொண்டு வருகிறார்கள். இந்தியா கூட்டணி தலைவர்களை விமர்சித்து வருகிறார்கள்" என்றார்.
-
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications