சட்டசபை தேர்தல்.. தவாக, பாஜக வேட்பாளர்களாக களமிறங்கும் சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, மகள் வித்யா ஆகியோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாஜகவின் வேட்பாளர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில மகளிர் அணி தலைவராக இருக்கிறார் முத்துலட்சுமி. பாஜகவின் மாநில மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார் வித்யா.

தவாகாவுக்கு மேட்டூர் தொகுதியும் கேட்கப்படுவதாக ஒரு தகவல் உண்டு. மேட்டூரில் திமுக கூட்டணியில் தவாகவின் முத்துலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் இருக்கும் வித்யாவை ஓசூர் தொகுதி பாஜக வேட்பாளராக நிறுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம். இருப்பினும் பாஜகவில் ஒருதரப்புதான் இத்தகைய முயற்சியை மேற்கொள்கின்றனராம்.
இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருக்கின்றனர்; அதேநேரத்தில் இருவருமே தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியமான சூழ்நிலை என்பது கேள்விக்குறியாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications