பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்
சென்னை: தமிழக பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் இடம்பெற்றுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாவுக்கு பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளை கடந்த சில வாரங்களாக அவர் அறிவித்து வருகிறார்.

பாஜவின் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முதன்மை பொறுப்புகளில் சர்ச்சைகள் வராத வகையில் ஏற்கனவே இருந்தவர்களே நியமிக்கப்பட்டனர். பாஜகவின் செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவுக்கும் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் பாஜகவில் இணைந்த ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலருக்கும் எந்த பதவியும் தரப்படவில்லை. இது சர்ச்சையாகவும் விவாதமாகவும் மாறியது. இந்த நிலையில் பாஜகவின் பல்வேறு பிரிவுகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் எல். முருகன் தொடர்ந்து வெளியிட்டார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினராக ராதாரவி இடம்பெற்றுள்ளார். மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஹண்டே, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றன.

வீரப்பன் மகளுக்கு பதவி
இந்த பட்டியலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞரணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்திக் குறிப்பில் வித்யா வீரப்பன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications