அஸ்ஸாம் மலையில் பதுங்க திட்டம் போட்டிருந்தார் சந்தன கடத்தல் வீரப்பன்: மனைவி முத்துலட்சுமி ஓபன் டாக்!
சென்னை: தமிழ்நாடு அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன், தலைமறைவாக இருந்த போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு தப்பி ஓடி பதுங்கி வாழ திட்டமிட்டிருந்ததாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களை மிரட்டி வந்தவர் சந்தனக் கடத்தல். தென்னிந்திய மாநில போலீசாருக்கு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிம்ம சொப்பனமாக பதுங்கி இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பல போலீஸ் அதிகாரிகளை கொடூரமாக படுகொலை செய்தவர். தந்தக் கடத்தல், சந்தனக் கடத்தல் தொடங்கி மனிதர்களை வேட்டையாடிய வீரப்பன், திடீரென தமிழ்த்தேசியவாதியாக உருவெடுத்தார். தமிழ்நாடு விடுதலைப் படையினர் வீரப்பனுடன் இணைந்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. பின்னர் தமிழ்நாடு அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தனக் கடத்தல் குறித்த ஆவணப்படமாக The Hunt for Veerappan எனும் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4 பாகங்களைக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடரானது பல்வேறு அரசல் புரசலான தகவல்களின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி வந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பம் மனைவியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான முத்துலட்சுமி இந்த ஆவணப்படத் தொடரில் கூறியிருப்பதாவது: வீரப்பனை யாரும் கிட்ட போய் பார்த்தது இல்லை. அந்த செய்தி மட்டும் அப்படியே பரவுது. வீரப்பன்னா யானை சுடுவாராம்.. 2 கொலை நடந்துச்சுன்னு சொன்னாங்க.. அதனால வீரப்பனை தேடுறாங்கன்னு சொன்னாங்க.. இந்த கல்லுல இருந்து அந்த கல்லுக்கு குதிப்பாராம்.. கண்டேபிடிக்க முடியாதாம்.. அப்ப எங்க வீட்டு பக்கத்துல இருந்தாங்க.. அப்ப வீரப்பனும் அவரோட ஆட்களும் துப்பாக்கியோடு லைனா நடந்து வர்றது அட்ராக்சனா இருக்கும். முதன் முதலாக முத்து இங்க வாய்யா.. உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கலாம் என்றார் வீரப்பன். உன்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன்னு சொன்னார்.

எனக்கு தாலி கட்டும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தார்னு சொல்லமாட்டேன். அவருக்குள்ள ஏதோ ஒரு வருத்தம் இருந்துச்சு. எங்க திருமண நாளில் ஒரு பையன் பாலாற்றில் இருந்து ஓடிவந்து தமிழ்நாடு , கர்நாடகா போலீசுக்கும் சரியான சண்டை.. கட்டைகளை(சந்தன கட்டைகள்) எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்கன்னு சொன்னார்.. பின்னாளில் ஒருநாள், அஸ்ஸாம் மலையில இடம் பார்த்துட்டேன்.. எல்லா லோடும் அனுப்பின பின்னாடி அங்க போய் யாருக்கும் தெரியாம அமைதியா வாழ்ந்துடலாம். ஆளெல்லாம் அனுப்பி போய் பார்த்துட்டும் வந்தாச்சுன்னு சொன்னார்.. ஆனால் அது நடக்கலை.. இவ்வாறு முத்துலட்சுமி அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications