ஐரோப்பாவை எட்டும் கருணாநிதி எழுத்து.. பிரெஞ்சு, ஜெர்மன் மொழியில் டிரான்ஸ்லேட் ஆகும் “சங்கத்தமிழ்”
சென்னை: மறைந்த முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "சங்கத்தமிழ்" தமிழ் பல்கலைக் கழகத்தால் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முபெ சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.
சென்னை திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் கலையரங்கத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலைப் பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைமாமணி முத்தரசி ரவியின் கலைக்கோயில் நாட்டியப் பள்ளியின் "கருணாநிதியின் சங்கத் தமிழ்" இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சங்கத்தமிழ்" இசை நாட்டிய நாடகத்தைக் கண்டு களிக்க வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்த்து வரும் கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் நடத்தப்பெறும் நாட்டியப் பெருவிழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இன்று நம்மோடு உருவமாக இல்லை என்றாலும் தன் எழுத்துகளால். உரைகளால், திரைவசனங்களால், பாடல்களால், நாடகங்களால், அனைத்து வகையிலும் முத்தமிழுக்குப் பெருமை சேர்த்து இன்றும் நம்மோடு வாழ்கிறார்.
சங்கீத நாடக சபைக்கு "தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம்" என முத்தமிழையும் சேர்த்து அருமையான தமிழ்ப்பெயர் சூட்ட முத்தமிழையும் ஆய்ந்தறிந்த முத்தமிழறிஞரைத் தவிர வேறு எவரால் முடியும்?முத்தமிழறிஞரின் பாசறையில் பயின்று, பண்பட்டு, இன்று அவர் வழியில் முத்தமிழின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வரும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்தி வணங்கக் கடமைப்பட்டுள்ளேன்.
தொன்மையான கலைகளை வளர்த்து, அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்து, அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்கி, நாடகம், நாட்டிய நாடகங்களுக்குப் புத்துயிர் அளித்து, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வெளிமாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச்சென்று, தமிழ்க்கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கி வரும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தை அருமையான இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.
முத்தமிழறிஞரின் அடிச்சுவட்டில் பீடுநடைபோட்டு வரும். நாடகமன்றத்தின் வாயிலாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நமது அரசானது தமிழ்நாடு இயல், இசை நலிவடைந்த கலைஞர்களுக்கு ரூ.3,000/- நிதியுதவியும்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், கலைக்குழுக்களுக்கும், இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க ரூ.10,000/- நிதியுதவியும், புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவியாக ரூ.25,000/- நிதியுதவியும், கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு ரூ.1,00,000/- நிதியுதவியும், தமிழில் அரும் பெரும் கலை நூல்களை வெளியிடும் நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2.00 இலட்சம் நிதியுதவியும் வழங்கி வருகிறது.
இவ்வகையில், கடந்த 14.01.2023 முதல் 17.01.2023 வரை 40-க்கும் மேற்பட்ட கலை வடிவங்களில், சுமார் 1000 கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டதை இங்கே குறிப்பிட விழைகிறேன். 'கலைச்சங்கமம்' என்னும் நாட்டுப்புறக்கலை மற்றும் செவ்வியல் கலைத் திருவிழாவின் மூலம் பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் நலிவடைந்த 23 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு ரூ.9.11 இலட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதையும், 500 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகளும், ரூ.70 இலட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதையும், 733 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக
ரூ.31.19 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதையும், 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கு ரூ.50 இலட்சம் அளிக்கப்பட்டுள்ளதையும் இம்மன்றத்தில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்.
மேலும், உலக நாட்டிய தினமான ஏப்ரல் 29 அன்று ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், முத்தமிழறிஞரின் நூற்றாண்டுப் பெருவிழாவினைக் கொண்டாடும் வகையில் ரூ.1 கோடி மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டிய நாடகங்கள் ரூ.15 இலட்சம் செலவிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"முத்தமிழறிஞர் கலைஞரின் சங்கத்தமிழ்" தமிழ் பல்கலைக் கழகத்தால் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சங்கத்தமிழ்" இசை நாட்டிய நாடகத்தைக் கண்டுகளிக்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி." என்றார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications