தி நகர் சாலையில் கிடந்த 45 சவரன்.. அப்படியே கொடுத்த 'தங்கம்'.. தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு
சென்னை: தூய்மை பணியாளர்களின் பணி மிகவும் சவால் நிறைந்தது. அதிலும் சென்னை போன்ற பெருநகரில் குப்பை சேகரிப்பு என்பது கடினமானது.. குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே தூக்கிப்போடுபவர்களே அதிகம். கடுமையான வேலைப்பளுவில் இருந்தாலும், எந்த முகசுளிப்பும் இன்றி திறமையாக பணியாற்றுகிறார்கள். அப்படி பணியாற்றும் பணியாளர்கள் நேர்மையாளர்களாகவும் இருக்கிறார்கள். தியாகராய நகரில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்துள்ளார். தூய்மை பணியாளர் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை தியாகராய நகரை பொறுத்தவரை வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக அமைந்துள்ளது.இங்கு பல்லாயிரம் மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சென்னையின் முக்கிய வணிக மையாக தியாகராய நகர் இருக்கிறது. இங்கு நகை வாங்கவும், ஜவுளி எடுக்கவும், ஷாப்பிங்கிற்காகவும் வரும் மக்கள் மிக அதிகம். அப்படி வந்த ஒருவர் சுமார் 45 சவரன் தங்க நகையை தவறவிட்டுவிட்டார். அதனை தூய்மை பணியாளர் போலீசில் ஒப்படைத்திருக்கிறார்.

சென்னை மாநகராட்சி பெண் தூய்மைப்பணியாளர் பத்மா என்பவர் சென்னை தியாகராய நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் நேற்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருப்பதை தூய்மை பணியாளர் பத்மா பார்த்துள்ளார்.
அதை பத்மா பிரித்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். போலீசார் பிளாஸ்டிக் கவரை பிரித்து நகைகளை சோதனை செய்தபோது அவை சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏற்கனவே பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் சுமார் 45 பவுன் தங்க நகையை தொலைத்து விட்டதாக புகார் அளித்து சென்றது தெரியவந்தது. பின்னர், புகார்தாரரான ரமேசை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அவர் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மாலை தியாகராய நகர் சென்றபோது தன் கையில் வைத்திருந்த நகைப்பையை அருகில் இருந்த தள்ளுவண்டி கடையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து மறந்துச்சென்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நகை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை போலீசார் மேற்கொண்டு ரமேஷிடம் நகைகளை ஒப்படைத்தார்கள். சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகையை கண்டெடுத்து, அதனை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை போலீசார் வெகுவாக பாராட்டினர்.பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications