சென்னை தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை வன்முறை – வன்னி அரசு கண்டனம்
சென்னை: 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை அப்புறப்படுத்தி கைது செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சுகாதாரப் பணியை தனியார் நிறுவனத்திற்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
அரசுத் தரப்பில் 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், "எங்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவல்துறை முடிந்தால் எங்களை அப்புறப்படுத்தட்டும். எங்களின் போராட்டத்தில் இருந்து எந்த வகையிலும் பின் வாங்க மாட்டோம். அரசுக்கு தூய்மைப் பணியாளர்களை விட தனியார் நிறுவனம் தான் முக்கியம்." என்று விமர்சனம் செய்திருந்தனர்.
வன்னி அரசு கண்டனம்
நேற்று மாலை முதலே ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீங்களே கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று இரவு அந்த மக்களை காவல்துறை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, "தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகையில் அறவழியில் போராடி வந்தனர்.
காவல்துறை தாக்குதல்
அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். இடது சாரி கட்சித் தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர் வலியுறுத்தினார். இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.
மேலும் போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வழக்கறிஞர் நிலவு மொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மக்கள் விரோதப்போக்கு
காவல்துறையின் இந்தப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.
நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்." என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications