சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்றார் ஏ.பி.சாஹி.. சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி இன்றுடன் ஓய்வு பெறுவதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சஞ்சிப் பானர்ஜியை தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ஏ.பி.சாஹி. கடந்த வருடம் அக்டோபரில் பொறுபேற்ற நிலையில் டிசம்பர், 31-ஆம் தேதியான இன்றுடன் ஓய்வு பெற்றார்.

Sanjib Banerjee appointed Chief Justice of Madras High Court

முன்னதாக புதிய தலைமை நீதிபதி நியமன பணிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய கொலிஜியம் குழு தீவிரமாக ஈடுபட்டது. இந்த குழு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

தலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி! கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்விதலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி! கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்வி

இதையடுத்து கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி
பொறுப்பேற்க உள்ளார்.

1990களில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய சஞ்சிப் பானர்ஜி, 2006ம் ஆண்டு நிரந்தர உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயரநீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Justice Sanjib Banerjee, who is currently a judge at Calcutta appointment as Chief Justice of Madras High Court. Justice Banerjee enrolled as an advocate in the year 1990 and practiced mainly in Calcutta High Court. He was appointed permanent judge of that High Court in 2006.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X