இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் கடைசி நாள் வரை சிறையில் இருந்த தியாகி! யார் இந்த சங்கரய்யா!
சென்னை: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் கடைசி நாள் வரை சிறையில் இருந்த தியாகி சங்கரய்யா!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா (102), இரு நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவருக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் யார் என்பதை பார்ப்போம்! விடுதலை போராட்ட வீரரும் , தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவருமான சங்கரய்யா 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆத்தூரில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு போராட தொடங்கினார். இதனால் 1941 ஆம் ஆண்டு அவர் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போதே ஆங்கிலேய அரசால் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
8 ஆண்டுகள் சிறையில் இருந்த சங்கரய்யா, 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை சிறைச்சாலைக்குள் நுழைந்த நீதிபதி, இந்த வழக்கு உங்கள் மீது போலீஸாரால் புனையப்பட்டது. அதனால் உங்களை நான் விடுதலை செய்கிறேன் என கூறினார். இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது முதல் சங்கரய்யா தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார். 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் சங்கரய்யா.
1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்வானார். திமுக அரசால் தலைசால் விருது பெற்றவர் சங்கரய்யா.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications